45
|
கறாகறா
வெனவொர்பால் காடைப் புள்ளினம்
ஞறாஞறா வெனவொர்பா னய்ந்த தோகைகள்
புறாகுறா வுதலொடு புள்பல் லோதையா
லறாதுறா வுணர்வுகு மரங்கஞ் சோலையே. |
|
கறாகறா
என ஓர் பால் காடைப் புள் இனம்,
ஞறாஞறா என ஓர் பால் நயந்த தோகைகள்,
புறா குறாவுதலொடு புள் பல் ஓதையால்
அறாது, உறா உணர்வு உகும் அரங்கம் சோலையே. |
ஒரு பக்கம்
காடைப் பறவைகளின் கூட்டம் கறாகறா என்று
ஒலிக்கவும், மற்றொரு பக்கம் விரும்பத்தக்க மயில்கள் ஞறாஞறா என்று
ஒலிக்கவும், புறாக்கள் கூவுவதோடு பல வகைப் பறவைகளின் பல வகை
ஓசை எப்பொழுதும் ஓயாமையால், அதுவரையில் பெற்றிராத அறிவைச்
சிறுவர்களுக்குச் சொரிந்து தரும் கல்வியரங்கம் போல் சோலை விளங்கும்.
தோகை - மயில்
இறகு. அது மயிலுக்கு ஆகுபெயராய் நின்றது.
46
|
மேல்வள
ரலர்ப்படம் விரித்து வீணைசெய்
பால்வளர் சுரும்பிசை பாட மாங்குயில்
வால்வளர் மயினடங் காண மற்றைப்புள்
சால்வளர் நாடக சாலை சோலையே. |
|
மேல்
வளர் அலர்ப் படம் விரித்து, வீணைசெய்
பால் வளர் சுரும்பு இசை, பாட மாங்குயில்
வால் வளர் மயில் நடம் காண மற்றைப் புள்,
சால் வளர் நாடக சாலை சோலையே. |
மேலே
வளர்ந்துள்ள மலர்களை மேற்கட்டி விரித்தாற்போற் கொண்டு,
அவ்விடத்து வளரும் வண்டுகள் வீணைபோல் இரைந்து செய்யும் இசைக்கு
ஏற்ப மாமரத்துக் குயில்கள் கூவிப் பாட, தோகை வளர்ந்த மயில்கள் ஆடும்
நடனத்தை மற்றப் பறவைகள் பார்த்துக் கொண்டிருக்க, இவ்வாறு பெரிதாய்
வளர்ந்த நாடக சாலையே போன்று சோலை விளங்கும்.
|