பக்கம் எண் :

முதற் காண்டம்398

                      11
மேழகங்கள் காத்தனகான் மேதினியின் காவலராய் விரிசெங்
                                  கோலாற்
சேழகங்கைத் தாவிதனு மோயிசனு நீ தெரிந்த கிளரன்
                                  பாண்மை
சூழகங்கண் களிகூர்ந்தே னினியுன்றாய்க் காவலனாய்த்
                                  துணைதந் தேயுன்
வாழகங்கை யெனைத்தூக்கி வகுத்தவரத் திணையெவணான்
                                  வகுப்ப லென்றான்.
 
"மேழகங்கள் காத்தன கால், மேதினியின் காவலராய் விரி
                               செங்கோலால்,
கேழ் அகம் கைத் தாவிதனும் மோயிசனும், நீ தெரிந்த கிளர்
                               அன்பு ஆண்மை
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன். இனி, உன் தாய்க் காவலனாய்த்
                               துணை தந்தே, உன்
வாழ் அகங் கை எனைத் தூக்கி வகுத்த வரத்து இணை எவண்
                               நான் வகுப்பல்?" என்றான்.

     "ஆடுகளைக் காத்துக் கொண்டிருந்த காலத்தில், ஒளி பொருந்திய
கையை உடைய தாவிதனையும் மோயிசனையும், நீதி விரிந்த செங்கோலால்
உலகத்தின் அரசராகுமாறு நீ தெரிந்து கொண்ட பெருகிய அன்பின்
திறத்தை ஆராய்ந்த மனத்துள் மகிழ்ச்சி மிகுந்து நின்றேன். இப்பொழுது,
உனக்குத் தாயாக வாய்த்தவளுக்குக் காவலனாய் என்னைத் துணைக்குத்
தந்து, உன் வாழ்வு தரும் உள்ளங்கையால் என்னைத் தூக்கி உயர்த்தி,
எனக்குத் தந்த வரத்துக்கு ஒப்பாக ஒன்றை எங்கே நான் தேடிக் கண்டு
கூறுவேன்?" என்றான்.

     இசுரவேல் மக்களை முடிசூடா மன்னனாக மோயிசனும் சூடிய
மன்னனாகத் தாவிதனும் ஆண்டனர். முன்னவனுக்குப் பிரம்புக் கோலும்
பின்னவனுக்குச் செங்கோலும் ஆட்சிக்கு அடையாளமாய் நின்றன.
மோயிசனை அழைத்தது, ப. ஏ., யாத்திராகமம் 3 : 1 - 12 காண்க.
தாவிதனை அழைத்தது, ப. ஏ., 1 சாமுவேல், 17 : 12 - 20 காண்க.