கன்னித்
தாய்க்குக் காட்டிய பரிவு
12 |
உம்பரிலு
மரிதிறனை யுயர்த்தநிலை யன்புபட வுணர்ந்து
ணர்ந்தே
பொம்பரிவும் பொங்கியெழத் தொழுதுதொழு தாயிர நாப்
புகல் கொண் டேனு
மெம்பரிலு நிழற்றுமல ரெழிற்றுசத்தோன் சூழ்ந்தவைநா
னியம்பும் பாலோ
கம்பரிவு மிகமுன்னர் கணித் தவயிர்ப் புணர்ந்துரைப்பான்
கனிவின் மீண்டே. |
|
உம்பரிலும் அரிதில்
தனை உயர்த்த நிலை அன்பு பட
உணர்ந்து உணர்ந்தே,
பொம் பரிவும் பொங்கி எழத் தொழுது தொழுது, ஆயிரம் நா
புகல் கொண்டேனும்,
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன், சூழ்ந்தவை, நான்
இயம்பும் பாலோ?
கம் பரிவு மிக, முன்னர் கணித்த அயிர்ப்பு உணர்ந்து,
உரைப்பான் கனிவின் மீண்டே: |
எவ்வுலகங்களிலும்
நிழல் செய்யும் மலர்களாலாகிய அழகிய
கொடியை உடையவனாகிய சூசை, வானவரைக் காட்டிலும் அரிய விதமாய்த்
தன்னைக் கடவுள் உயர்த்திய நிலைத்த அன்பைப் பொருந்த உணர்ந்து
உணர்ந்து, நிறைந்த ஆர்வமும் பொங்கி எழத் தொழுது தொழுது, தன்
உள்ளத்தில் கருதியவற்றையெல்லாம், ஆயிரம் நாவுகளால் நான் சொல்ல
முற்படுவதாயினும் முற்ற முடியச் சொல்லக் கூடுமோ? முன்னர் தான் கருதிய
ஐயத்தை நினைந்து, காற்றெனப் பெருகிய ஆர்வம் மேலோங்க, மீண்டும்
கனிவோடு அவன் பின் வருமாறு சொல்லுவான்:
துசத்தோன் -
'துவசத்தோன்' என்பது இடை குறைந்து நின்றது.
'நான்' என்பது ஆசிரியர் தம்மையே சுட்டியது.
13 |
வான்செய்த
சுடரினுந்தூய் தெருளோனே மருளற்ற வலிநல்
லோனே
தேன்செய்த மலரீந்து சிறந்தமணங் கூட்டிநினைச் சேயென்
றீனு
மீன்செய்த முடியாளைத் தந்துதந்த நயனறியா வினைப்ப
யத்தால்
யான்செய்த குறைகுணியா தினிதளித்தி நினை வினுமுங்
கிரக்க மிக்கோய் |
|