"செந்நிறம்
பொருந்திய வானுலகத்தோடு பிற நிலங்கள் யாவற்றையும்
படைத்துக் காத்து ஆளும் சிறந்த அரசனாகிய ஆண்டவனே, அலைகள்
மொய்த்துள்ள கடலை ஆடையாக உடுத்த இவ்வுலகில் உனக்குத் தாய்
என அமைந்த, என்றும் மொட்டாகவே விளங்கும் கன்னி என் கைக்குக்
கிட்டுமாறு அடியேனைத் தெரிந்து கொண்டாயோ! அதன் பின் நான் குற்றம்
பொருந்திய பொய்யான துயரம் அடைந்து, பிரிந்து போய் இவளது நன்மை
தரும் பக்கத்து இருப்பை விட்டு அகலவும் நினைந்தேனே!
முகுளம் - 'முகிழம்'
என்பதன் போலி. அது மலரும் பருவத்து
மொட்டைக் குறிக்கும். விரியாத மொட்டுப்போல் என்றும் தன் கன்னிமை
அழியாத இயல்பு பற்றி மரியாளை 'முகுளங் கன்னி' என்றான்.
'தெரிந்தாயோ' என்றவிடத்து அப் பேறு பற்றிய வியப்பும், 'உன்னினேனே'
என்றவிடத்து அச்செயல் பற்றிய நாணமும் பிறந்தன.
15 |
அரியமறை
கொழுந்தெனமேற் படர்தரவீங் கோர்கொழுகொம்
பன்ன வட்கே
யுரியமுறை யறிவில்லா யான்கொழுகொம் பாவதுண்டோ
யுயர்வான் மீதில்
விரியவுறை யும்பரையும் ஏவலைக்கொள் பொருவற்ற மேன்மை
யாளைத்
திரியமுறை யிட்டேவல் கொண்டேனே கொண்டநயன் றெளியாச்
சீர்க்கே. |
|
"அரிய மறை கொழுந்து
என மேல் படர் தர ஈங்கு ஓர் கொழுகொம்பு
அன்னவட்கே
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ?
உயர் வான் மீதில்
விரிய உறை உம்பரையும் ஏவலைக் கொள் பொருவு அற்ற
மேன்மையாளை,
திரிய முறை இட்டு, ஏவல் கொண்டேனே, கொண்ட நயன் தெளியாச்
சீர்க்கே. |
|