"அரிய வேதமே
ஒரு கொழுந்து போலத் தன்மேல் படர இவ்வுலகில்
ஒரு கொழுகொம்பு போன்றவளுக்கு, அவ் வேதத்திற்கு உரிய ஒழுங்குமுறை
பற்றிய அறிவும் இல்லாத நான் கொழுகொம்பு ஆவது உண்டோ? உயர்ந்த
வானத்தில் விரிவாக வாழும் வானவர்களையெல்லாம் ஏவல் கொள்ளும்
ஒப்பற்ற மேன்மை உடைய மரியாளை, மாறுபட்ட தன்மையாய்
மனைவியென்று முறை சொல்லி, அவள் கொண்டுள்ள நலங்களைத்
தெளிவாக அறியாத் தன்மையால், நான் ஏவல் கொண்டேனே!
16 |
சேதுலாங்
கதிரெறிக்குஞ் செழுவெய்யோன் றனையுடுத்த செய்ய
மேனி
மீதுலாந் தாரகையை விளக்கிமைக்கு மகுடமென வேய்ந்த
சென்னி
சீதுலாங் கதிர்காலுந் திங்களுரைந் தொளிபாய்ந்த செழுந்தண்
பூந்தா
வீதுலாம் வடிவங்கொண் டிணைதீர்ந்த மாட்சிமையா ளிவளா
மன்றோ. |
|
"சேது உலாம்
கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய
மேனி,
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த
சென்னி,
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைந்து ஒளி பாய்ந்த செழுந் தண்
பூந் தாள்
ஈது உலாம் வடிவம் கொண்டு, இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள்
ஆம் அன்றோ? |
"செந்நிறங்
கொண்ட கதிர்களை வீசும் செழுமையான பகலவனை
ஆடையாக உடுத்த செந்நிற மேனியும், வான்மீது உலாவும் விண்மீன்களை
ஒளி மின்னும் முடியாக அணிந்த தலையும், குளிர்ச்சி பொருந்திய
கதிர்களைப் பொழியும் மதியை உராய்ந்து ஒளி பரவிய செழுமையான
அழகிய கால்களுமாக, உலாவும் வடிவம் தனக்கு இதுவாகக் கொண்டு,
ஒப்புமை எல்லாம் கடந்த மாட்சிமை உடையவள் இக் கன்னி மரியாளே
அல்லவா?
வெய்யோன் ஆடை,
தாரகை மகுடம், உரைந்த திங்கள்: 5:28 அடிக்குறிப்பு காண்க.
|