17 |
இலகெல்லா
முயன்றுயர்ந்த வெந்தைமடி வின்றிவகுத் தினிதிற்
செய்த
வுலகெல்லா முறிதரநஞ் சுயிர்த்தகரும் பாந்தடலை யுயர்மி
தித்தே
விலகெல்லா நஞ்சினுக்கோர் மருந்தாகுந் தையலிவள் விரிந்த
வையத்
தலகில்லாள் பொருவில்லா ளமரர்தொழு மடிநல்லா ளிவளா
மன்றோ. |
|
"இலகு எல்லாம்
முயன்று, உயர்ந்த எந்தை, மடிவு இன்றி வகுத்து,
இனிதின் செய்த
உலகு எல்லாம் முறிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர்
மிதித்தே
விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள், விரிந்த
வையத்து
அலகு இல்லாள்; பொருவு இல்லாள். அமரர் தொழும் அடி நல்லாள்
இவள் ஆம் ஆன்றோ? |
"நம் உயர்ந்த தந்தையாம் ஆண்டவன், அழிவு இல்லாத விதமாய்
வகுத்து, முதலில் ஒளி தரும் யாவற்றையும் படைத்து, பின் இனிதாக
அமைந்த உலகமெல்லாம் கெடுமாறு நஞ்சைக் கக்கிய கருநாகமாகிய பேயின்
தலையை மேல் நின்று மிதித்து, எல்லா நஞ்சினுக்கும் ஒரு தடுப்பு மருந்து
ஆகும் பெண்ணாகிய இவள், விரிந்த இவ்வுலகத்தில் அளவிற்கு
அடங்காதவள்; ஒப்பு இல்லாதவள். வானவர் தொழத் தக்க அடியை உடைய
நல்லவளும் இவளே அல்லவா? பாம்பின் தலையை மிதித்தவள் 5 : 19
அடிக்குறிப்பு காண்க. 18 செய்ம்முறையுங் கடன்முறையுந் திறம்பாத நீதிநெறிச்
செழுங்கண் ணாடி மெய்ம்முறையு மறைமுறையும் விளக்குகின்ற ஞானமமை
வியனத் தாணி கைம்முறையு மளிமுறையும் பொழிகனக மாரியினாற் கருணைக் காள மிம்முறையு
மெம்முறையுங் கடந்துயர்ந்த மாட்சிமையா ளிவளா மன்றோ.
|