பக்கம் எண் :

முதற் காண்டம்404

"செய் முறையும் கடன் முறையும் திறம்பாத நீதி நெறிச்
                         செழுங் கண்ணாடி;
மெய் முறையும் மறை முறையும் விளக்குகின்ற ஞானம்
                         அமை வியன் அத்தாணி;
கை முறையும் அளி முறையும் பொழி கனக மாரியினால்
                         கருணைக் காளம்.
இம் முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த
                மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ?


     "செய்ய வேண்டிய சடங்கு முறையும் கடமையான ஒழுக்க முறையும்
வழுவாத நீதி நெறியை எடுத்துக் காட்டும் செழுமையான கண்ணாடி இவள்;
உண்மையின் முறையையும் வேதத்தின் ஒழுங்கு முறையையும் விளக்கிக்
காட்டத் தக்க ஞானம் அமைந்த பெருமை வாய்ந்த அரியணை இவள்;
கையால் செய்கின்ற கொடை முறையும் உள்ளத்தாற் காட்டும் கருணை
முறையுமாகப் பொழிகின்ற பொன் மாரியால் கருணை மேகம் இவள்.
இங்குக் கூறிய இம் முறையும், வேறு எம் முறையும் கடந்து உயர்ந்த
மாட்சிமை உடையவளும் இவளே அல்லவா?"
 
                     19
புத்தான வளமெல்லாம் பூண்டிமைக்கு மியல்புறிநூற் புலமை
                                         நல்லோ
ரெத்தாலு நிகர்ப்பரிய விவ்வறத்தி தனையைய மிதயத்
                                        தெண்ணிச்
சத்தான கடவுடருந் தெருளோடென் னகமறிந்த தகைவி
                                         னாட்கண்
ணுத்தான வழியாதென் றுளக்களிப்போ டுட்கெய்தி
                                 யுளைந்தான் சூசை.
 
"புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்பு உறி,
                               நூல் புலமை நல்லோர்
எத்தாலும் நிகர்ப்பு அரிய இவ் அறத்தி தனை ஐயம் இதயத்து
                               எண்ணி,
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த
                               தகைவினாள்கண்
உத்தான வழி யாது?" என்று, உளக் களிப்போடு உட்கு எய்தி
                               உளைந்தான் சூசை.