"புதுமையான
வரங்களின் வளமெல்லாம் பூண்டு இலங்கும் இயல்பைத்
தனக்கு உரியதாகக் கொண்டிருந்து, நூல்களைக் கற்ற புலமை வாய்ந்த
நல்லோரும் எவ்வகையாலும் ஒப்புக்கூற இயலாத இந்தப் புண்ணியவதியைப்
பற்றி உள்ளத்தில் ஐயம் நினைந்து, பின், உண்மை வடிவான கடவுள்
தனக்குத் தந்துள்ள மனத் தெளிவினால் என் உள்ளத்தில் நிகழ்ந்ததை
அறிந்து வைத்துள்ள இப்பெருமாட்டியிடத்து நான் அடுத்துச் செல்ல வழி
யாது?" என்று, சூசை மனக் களிப்போடு நடுக்கமும் கொண்டு வருந்தினான்.
ஐயம் தெளிந்தமையால்
களிப்பும், ஐயங்கொண்ட குறையால்
நடுக்கமும் கொண்டான். 'இயல்புறி' என்ற விடத்து, 'உறீஇ' என்ற அளபெடை
ஓசை நீளாமை கருதி 'உறி' என நின்றது
சூசையின்
உவகை
- விளம், -
விளம், - மா. கூவிளம்
20 |
கொழுந்தழுந்
தழன்றவாய் குறுகி வீழ்தலி
லெழுந்தெழுங் கரத்தினா லிழிவின் றுய்வர்போல்
விழுந்தெழுந் தகவினோன் வெருவி நாதனன்
பழுந்தெழுந் துணரடி யரற்றி யேத்தினான். |
|
கொழுந்து அழுந்து
அகன்ற வாய் குறுகி வீழ்தலில்,
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல்,
விழுந்து எழும் தகவினோன் வெருவி, நாதன் அன்பு
அழுந்து எழும் துணர் அடி, அரற்றி ஏத்தினான். |
கொழுந்து விட்டு
எரிந்த குழியின் வாயை நெருங்கி விழப் போகையில்,
உதவிக்கு வந்து சேரும் கையினால் எழுந்து கேடு இல்லாமல் பிழைத்துக்
கொள்பவர்போல், ஐயத்தில் விழுந்து அதினின்று மீண்டு எழும் பெருமை
கொண்டவனாகிய சூசை தனக்குள் மேற் கூறியவாறு அஞ்சிப் புலம்பி,
ஆண்டவனின் அன்பு பதிந்த உயர்ந்த மலரடி போற்றினான்.
|