கன்னித்
தாயைக் கணவன் வணங்குதல்
26 |
செழுந்திரு
மாதறை திறந்த போதிவ
னெழுந்திருந் தையென விதயந் துண்ணெனா
விழுந்திரு விழுந்திரு வடியை வேண்டினான்
றொழுந்திரு வடிமிசை மழைக்கண் டூவியே. |
|
செழுந் திரு மாது
அறை திறந்த போது, இவன்
எழுந்திருந்து ஐ என, இதயம் துண் எனா விழுந்து,
இரு விழுந் திரு அடியை வேண்டினான்,
தொழும் திரு அடி மிசை மழைக் கண் தூவியே. |
செழுமையான
வரங்களின் செல்வம் படைத்த பெண்ணாகிய மரியாள்
தன் அறையைத் திறந்த போது, இச் சூசை விரைந்து எழுந்திருந்து, தன்
நெஞ்சு படபடக்க விழுந்து, தான் தொழும் திருவடி மீது மழை போலக்
கண்ணீர் சொரிந்து, அவளது இரண்டு சிறந்த திருவடிகளையும் வேண்டினான்.
முன் பாடலில்
'நின்றனன்' என்றதும், இப்பாடலில் 'எழுந்திருந்து'
என்றதும் பொருந்துமாறு, 'அணுகி நின்றவன் பின் சற்று விலகி
அமர்ந்திருந்தான்' என்று கொள்க. 'விழுந்திரு' என இரண்டாவது வந்தது,
'விழு + திரு' எனப் பிரிந்து. 'விழுத் திரு' என இணையற்பாலது, இணைந்த
மெல்லோசை இன்பம் பொருட்டு அவ்வாறு நின்றதெனக் கொள்க. அடியை
வேண்டுதலாவது, குற்றத்தை மன்னித்து ஆட்கொள்ளுதல் கருதியது. சூசை
தன் அடியில் விழவும் தொழவும் மரியாள் விட்டது, திடீரென நிகழ்ந்த
திகைப்பினால் என்று, 'பொருக்கெனத் துணைவனைப் பொலியத் தூக்கினாள்'
என்று (31) பின்வருவதனோடு பொருத்திக் காண்க.
27 |
ஈரணி
தயவுட னென்னை யாளுடை
சீரணி யறத்தினாய் செகத்து நாயகி
காரணன் மகவெனக் கருப்பந் தாங்கிமெய்
யாரண மொழிமுறை யமைத்த மாட்சியாய் |
|