பக்கம் எண் :

முதற் காண்டம்410

"ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை
சீர் அணி அறத்தினாய்! செகத்து நாயகி!
காரணன் மகவு எனக் கருப்பம் தாங்கி, மெய்
ஆரண மொழி முறை அமைத்த மாட்சியாய்!

     "இரக்கம் பொருந்திய தயவோடு என்னை அடிமையாகக் கொண்டுள்ள
சிறப்புப் பொருந்திய புண்ணியவதியே! உலகத்துக்கெல்லாம் தலைவியே!
எல்லாவற்றிற்கும் ஆதிகாரணனான ஆண்டவனை மகனாகக் கருப்பம்
தாங்கி, மெய்யான வேதவாக்கை முறையாக நிறைவேற்றி வைத்த மாண்பு
கொண்டவளே!

     வேதவாக்கு: 5:22 அடிக் குறிப்பு காண்க. ஈர் - ஈரம் என்பதன்
கடைக் குறை.
 
               28
கோதுறத் தமியனுட் குணித்த யாவையு
மேதறத் தெரிதரு மிரவிக் காட்சியாய்
தீதறத் தயையிலுன் சிறுவன் றன்மையா
னீதறத் திளைத்தவென் குறைக ணீக்குவாய்.
 
"கோது உறத் தமியன் உள் குணித்த யாவையும்
ஏது அறத் தெரி தரும் இரவிக் காட்சியாய்!
தீது அறத் தயையில் உன் சிறுவன் தன்மையால்,
நீது அறத் திளைத்த என் குறைகள் நீக்குவாய்.

     "தனிப்பட்ட நான், குற்றம் பொருந்துமாறு உள்ளத்தில் கருதிய
யாவற்றையும் குறையறத் தெரிந்துகொள்ளக் கூடிய, கதிரவனை ஒத்த காட்சித்
தெளிவு உடையவளே! பாவந் தீர்வதற்குக் கருணை காட்டுவதில் உன் மகன்
மன்னிக்கும் தன்மை போல், நீதி அறுமாறு நடந்து கொண்ட என் குறைகளை
நீயே போக்குவாய்.

     நீது - 'நீதம்' என்ற சொல் கடை குறைந்து நின்றது.