நீரோடை நடனக்
காட்சியைக் காண இயலாமல் நலிந்ததாகக் காட்டிய
கற்பனை இது. அலைதலைக் காற்றாலும் அலையாலும் அலைவதாகவும்,
ஒருமித்து ஓர் இடம் நாடுதலை அவை இல்லாதபோது ஒருமுகமாக நிமிர்ந்து
நிற்பதாகவும் கொள்க. இதற்கு நேர்மாறாகக் கரைமேல் நின்ற காந்தள்
பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிற்று என்று கொள்க.
மலர் கொய்த மகளிர்
49
|
தோகைகொண்
மயிலென மாதர் தோன்றலின்
வாகைகொண் டாரென மயிலொ டுங்கலாற்
சாகைகொண் டெனையபுள் சிரித்த தன்மைபோ
லோகைகொண் டொலிதர வொலிக்கு நாடெலாம். |
|
தோகை
கொள் மயில் என மாதர் தோன்றலின்,
வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால்,
சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல்,
ஓகை கொண்டு ஒலி தர, ஒலிக்கும் நாடு எலாம். |
தோகை கொண்ட
மயில்போலச் சூதேய நாட்டு மகளிர் அங்கு வந்து
தோன்றினர். அவர் தம்மை வெற்றி கொண்டனர் என்று மயில்கள்
அடங்கின. மற்றப் பறவைகள், மயில்களை இகழ்ந்து சிரித்ததுபோல், மரக்
கொம்புகளில் அமர்ந்திருந்து, களிப்புக் கொண்டு ஒலித்தன. இவ்வாறு
சூதேய நாடு முழுவதும் ஒலிமிகுந்து காணப்படும்.
மகளிர்
கூந்தல் மயில் தோகைக்கு நிகராகக் கூறப்பட்டது.
தோகையால் பிற பறவைகளை வென்று நின்ற மயில்கள், மகளிர் கூந்தலால்
அப்பெருமையும் இழந்து ஒடுங்கின. பிற பறவைகள் அது கண்டு சிரித்தன.
எனைய - 'ஏனைய' என்ற சொல்லின் குறுக்கல் விகாரம்.
50
|
உதித்தன
கதிரென வுவந்த மாங்குயில்
துதித்தெனப் பாடியொண் ணனந்தன் றூய்நடை
விதித்தென முன்னடந் ததுதம் மெல்லடி
பதித்தென நடந்தனர் பனிகொள் கோதையார். |
|
உதித்தன கதிர் என உவந்த மாங் குயில்
துதித்து எனப் பாடி, ஒண் அனம் தன் தூய் நடை
விதித்து என முன் நடந்தது, தம் மெல் அடி
பதித்து என நடந்தனர் பனி கொள் கோதையார். |
|