இருவர்
உவகை
36 |
பீடையால்
வற்றிய வுளத்திற் பேரொளி
யாடையா ளுரையினா லரிதின் பாழ்ந்தனன்
கோடையால் வற்றிப்பெய் கொண்ட லாற்பெரு
கோடையால் நிகர்த்தன வோகைச் சிந்தையான். |
|
பீடையால் வற்றிய
உளத்தில் பேர் ஒளி
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன்,
கோடையால் வற்றி, பெய் கொண்டலால் பெருகு
ஓடையால் நிகர்த்தன ஓகைச் சிந்தையான். |
கோடை வெயிலால்
வற்றி, பின் பெய்த மழையால் பெருகியோடும்
நீரோடையைப் போன்ற மகிழ்ச்சி கொண்ட மனத்தை உடைய சூசை, முன்
துயரத்தால் வாடிய உள்ளத்தில், பேரொளியாகிய ஆதவனை ஆடையாகக்
கொண்ட மரியாள் சொல்லால் இப்பொழுது அரிய இன்பங் கொண்டு
ஆழ்ந்தான்.
கோடை - மேல்காற்று:
அக்காலத்து வெயிலுக்கு ஆகுபெயர்.
கொண்டல் - கீழ்காற்று: அக்காலத்து மேகத்திற்கும் மழைக்கும் ஆகுபெயர்.
ஒடையால் - ஒடையை; இரண்டாம் வேற்றுமை மூன்றாம் வேற்றுமையாய்
மயங்கி நின்றது.
37 |
கோள்கடைந்
தழுத்திய மகுடக் கோதையாள் பீள்கடைந் தழுத்திய கதிர்பி லிற்றல்காண்
டாள்கடைந் தழுத்திய தாரின் வாகையான்
வாள்கடைந் தழுத்திய வருத்த நீக்கினான். |
|
கோள் கடைந்து
அழுத்திய மகுடக் கோதையாள்
பீள் கடைந்து அழுத்திய கதிர் பிலிற்றல் காண்,
தாள் கடைந்து அழுத்திய தாரின் வாகையான்,
வாள் கடைந்து அழுத்திய வருத்தம் நீக்கினான். |
ஒரு தண்டைக்
கடைந்து அழுத்தி வைத்தது போன்ற மலர்க்
கொடியை உடையவனாகிய சூசை, விண்மீன்களைத் திருத்திப் பதித்த
முடியை அணிந்த மங்கை மரியாளின் வயிற்றைச் செப்பஞ் செய்து
|