| "சொல்வதற்கு
அரிய பெருமை கொண்ட மாதருக்குள்ளே மாறுதல்
இல்லாத திரு வரங்களால் விளங்கும் மாட்சிமை உடையவளே! நடப்பதற்கு
அரிய முறையில் உனக்கு மகனாகிய பெறுவதற்கு அரிய கடவுளை வயிற்றில்
தாங்கும் பீடம் ஆனவளே!
சேறு: 'செல்லுதல்'
என்ற தொழிற் பெயர் செல் + தல் எனப் பிரியும்.
அது 'சேறல்' என வரினும், அதன் பகுதி 'செல்' என்பது. சேறு + அல்
எனப் பிரித்து, 'சேறு' என்பது பகுதியெனக் கொண்டு அமைத்த தொடர் 'சேறருந் தன்மை'
என்பது.
| 40 |
ஒளிமுகத்
திந்தெதி ரிரவி யுற்றெனாக்
களிமுகத் துன்னையுன் கடவு ணோக்கிமுற்
றெளிமுகத் தியம்பிய சீரின் றுன்னிடை
துளிமுகத் தமைந்ததாற் றுதிப்பர் யாருமே. |
| |
"ஒளி முகத்து,
இந்து எதிர், இரவி உற்று எனா,
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி, முன்
தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன் இடை
துளி முகத்து அமைந்ததால், துதிப்பர் யாருமே |
"மதிக்கு நேர்
எதிர்த்திசையில் ஒளி முகங்கொண்ட பகலவன்
அடைந்து நின்றது போல, உன் கடவுள் களிப்புள்ள முகத்தோடு உன்னை
நோக்கி, முன்தெளிந்த முறையில் வேதவாக்காகச் சொல்லிய சிறப்பெல்லாம்
இன்று உன்னிடத்து மழை போல் அமைந்து கிடப்பதனால், எல்லோருமே
என்னைத் துதிப்பர்.
பகலவன் நேர்
எதிர்த்திசையில் நின்றால் மதி முழு மதியாக ஒளி
நிறைந்து தோன்றும்.
| 41 |
மைக்கடன்
மருவிய வையத் தாரினுள்
ளிக்கடன் மானரு மிருமை யுற்றநா
னக்கடன் றவறிலா திருத்த லாகநீ
நிக்கடன் மதலையா நிமலற் போற்றுவாய். |
|