"மைக் கடல்
மருவிய வையத்தாரின் உள்,
இக் கடல் மான் அரும் இருமை உற்ற நான்,
அக் கடன் தவறு இலா திருத்தல் ஆக, நீ
நிக்கு அடல் மதலை ஆம் நிமலற் போற்றுவாய்." |
"கருங் கடல்
சூழ்ந்துள்ள இவ்வுலகத்து மனிதருள்ளே, இந்தக் கடலும்
ஒப்பாவதற்கு அரிய பெருமையைப் பெற்றுள்ள நான், அந்தக் கடமையைத்
தவறு இல்லாமலும் திருத்தமாகவும் செய்து முடிக்கும் பொருட்டு, உனக்கு
வல்லமையுள்ள மகனாய் அமைந்துள்ள அவ்வாண்டவனை நீயே போற்ற
வேண்டுவாய்."
'பெருமை' அத்திருமகனுக்கு
வளர்ப்புத் தந்தையாய் அமைந்த
பெருமை. நின் + கு - 'நிற்கு' என்ற சொல், எதுகை இன்னோசைப்
பொருட்டு, 'நிக்கு' என நின்றது
| 42 |
என்றுதி
ரிரவிவில் லெதிர்தி ருப்பலா
நின்றுதிர் பளிங்கென நிரம்பி யோதிய
தன்றுதி யடங்கலுந் தனது நாதனைத்
துன்றுதி யாக்கினள் பளிங்கி றூயினள். |
| |
என்று, உதிர்
இரவி வில் எதிர் திருப்பல் ஆ
நின்று உதிர் பளிங்கு என, நிரம்பி ஓதிய
தன் துதி அடங்கலும் தனது நாதனைத்
துன் துதி ஆக்கினள், பளிங்கில் தூயினள். |
என்றெல்லாம்
சூசை சொல்லவே, பளிங்கைக் காட்டிலும் தூயவளாகிய
மரியாள், தன்மீது சொரியும் பகலவன் ஒளியை எதிர்த்திசையில் திருப்புதலே
இயல்பாகக் கொண்டு உதிர்த்து விடும் கண்ணாடியைப் போல, அவன் அன்பு
நிரம்பிக் கூறிய தன் புகழ்ச்சி முழுவதும் தனது ஆண்டவனையே சென்று
சேரும் துதியாக ஆக்கித் திருப்பினாள்.
| 43 |
எண்ணிலாச்
சுடரென விமைத்த வானவர்
வண்ணிலா நறுமலர் வருடந் தூவின
ரொண்ணிலா விவர்பத முவந்து சூடின
ரண்ணலாந் தனைத்துதி யளவிற் பாடினர். |
|