எண் இலாச் சுடர்
என இமைத்த வானவர்
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர்;
ஒள் நிலாவுஇவர் பதம் உவந்து சூடினர்;
அண்ணல் ஆம் தனைத் துதி அளவு இல் பாடினர். |
அப்பொழுது,
எண்ணிக்கையில்லாத ஒளிச் சுடர்கள் போல் மின்னிய
வானவர்கள் வளமான நிலாப் போன்ற பொன்னிற நறுமண மலர்களை
மழையாய்ப் பொழிந்தனர்; ஒளி பொருந்திய இவ்விருவர் அடிகளையும் தமது
தலைக்கு அணியாகச் சூடிக்கொண்டனர்; யாவர்க்கும் தலைவனாகிய
ஆண்டவன்மீது அளவில்லாத துதிகளைப் பாடினர்.
கன்னித்
தாய்க்கு வானவர் வணக்கம்
-
- காய், - - காய், - மா, தேமா, - - காய், - - காய், - மா, தேமா.
| 44 |
இருள் பரந்த
வையமொடு துயரு நீக்கி
யின்பலையின் மூழ்கியவொண் டவத்தின் மிக்கோன்
றெருள்பரந்த காட்சியுறீஇ யுளத்தி லோங்கச்
சேணுறையோர் பாடியபே ருவகை யாலோ
ருருள்பரந்த சுடருடுத்த மேனி தானு
முயிர்சென்ற வழிசென்றா லென்னாச் சூழப்
பொருள் பரந்த கதிரெறிக்கு முருவந் தோன்றிப்
புவிநிலைவிட் டுயர்நின்றா ளுரைமே னின்றாள். |
| |
இருள் பரந்த
ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையின்
மூழ்கிய ஓண் தவத்தின் மிக்கோன்
தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க, சேண் உறையோர்
பாடிய பேர் உவகையால் ஓர்
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும், உயிர் சென்ற
வழி, சென்றால் என்னா, சூழப்
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி, புவி நிலை
விட்டு உயர் நின்றாள், உரை மேல் நின்றாள். |
|