| இதுவோ?' என்று வெறுத்தாற்
போல வளர்ந்து தேயும் குளிர்ந்த கதிரைப்
பொழியும் இளம் பிறையைத் தன் அடிகளால் மிதித்துத் தேய்த்து நின்றாள்.
தன்னை அடைக்கலமாகச் சென்று சேர்ந்தோர் கேடு அடையார் என்று
காட்டினாற் போல கதிரவனின் முன்னும் தெளிந்த கதிரைப் பொழியும்
விண் மீன் கூட்டத்தை முடியாய்ச் சூடியும், 'தெளிந்த ஞானநிலை இதுவே'
என்று காட்டுவது போல, சுடாமல் குளிர்ந்த ஒளிக் கதிர்களைப் பொழியும்
ஆதவனை ஆடையாக உடுத்தும் நின்றாள்.
விரதம் என்பது
பொதுவாக அறவொழுக்கத்தையும், சிறப்பாகத் தவ
ஒழுக்கத்தையும் குறிக்கும். வளர்தலேயன்றித் தேய்தல் விரதத்திற்கு
இழுக்காகும். முதற்சீர்க்கண் விண் - விண்ணவருக்கு ஆகுபெயர்.
| 47 |
திருக்கொண்டா
ரொளிகொண்ட வானில் வைகித்
தெளியுணர்வுண் டுருவின்றி யணுவாய் நின்றோ
ருருக்கொண்டா ருயர்நின்ற வெந்தை தாய்தன்
னொளியெறிக்கு மலர்ப்பதத்தை யேத்தி யேத்தி
மருக்கொண்டார் மதுமலரைத் தூவித் தூவி
மதுத்தொடையான் மண்டுபுகழ் பாடிப் பாடிக்
கருக் கொண்டாள் வரப்பவ்வ நீந்தி நீந்திக்
கதிர்வெள்ளஞ் சூழெறித்துக் கனிநின் றாரால். |
| |
திருக் கொண்டு,
ஆர் ஒளி கொண்ட வானில் வைகி,
தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர்
உருக் கொண்டார்; உயர் நின்ற எந்தை தாய் தன்
ஒளி எறிக்கும் மலர்ப் பதத்தை ஏத்தி ஏத்தி,
மருக் கொண்டு ஆர் மது மலரைத் தூவித் தூவி,
மதுத் தொடையால் மண்டு புகழ் பாடிப் பாடி,
கருக் கொண்டாள் வரப் பவ்வம் நீந்தி நீந்தி,
கதிர் வெள்ளம் சூழ் எறித்துக் கனி நின்றார் ஆல்.
|
செல்வமெல்லாம்
கொண்டு, நிறைந்த ஒளியும் கொண்டுள்ள
வானுலகத்தில் நிலைகொண்டு, தெளிந்த அறிவு மட்டும் கொண்டு உருவம்
இல்லாமல் அணுப்போல் அமைந்த வானவர் அன்று உருவம் கொண்டு
நின்றனர்; வானில் உயர்ந்து நின்ற, எம் தந்தையாகிய ஆண்டவனின்
|