|
தாயுடைய ஒளி வீசும்
மலர் போன்ற அடியைப் போற்றிப் போற்றி,
மணத்தோடு தேன் நிறைந்த மலர்களை அவ்வடியில் தூவித் தூவி, தேன்
நிறைந்த பூமாலை போன்ற பாமாலையால் அவளது செறிந்த புகழைப் பாடிப்
பாடி, கருக் கொண்ட அவள் பெற்றிருந்த வரமாகிய கடலில் நீந்தி நீந்தி,
ஒளிக் கதிராகிய வெள்ளத்தைச் சுற்றிலும் வீசிக் கொண்டு கனிவோடு
நின்றனர்,
'ஆல்' அசைநிலை.
வானவர் உருக்கொண்டு நின்றது சூசையின்
கண்ணுக்கு புலனாகும் பொருட்டு.
| 48 |
எவ்வுலகி
னோருமுய்யக் கருணை யுள்ளி
யிம்மடந்தை தனைமுதலோன் வனைந்து வானத்
தவ்வுலகி னோர்பிரிந்த வவைக ளொன்பா
னவைய வைக்கோ ரொருநூறும் பலரோர் நூறு
மிவ்வுலகி னிவள்பிறந்த முதனா ளாதி
யிவட்பணிகேட் டாயிரரும் பிரியா முந்நீர்
வவ்வுலகின் தமதரசி யாகச் சூழ்க வானிறையோ
னன்புபுரிந் தேவி னானே. |
| |
எவ் உலகினோரும்
உய்யக் கருணை உள்ளி
இம் மடந்தை தனை, முதலோன், வனைந்து, வானத்து
அவ் உலகினோர் பிரிந்த அவைகள் ஒன்பான்,
அவை அவைக்கு ஓர் ஒரு நூறும், பலர் ஓர் நூறும்,
இவ் உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி
இவள் பணி கேட்டு, ஆயிரரும், பிரியா, முந்நீர்
வவ்வு உலகின் தமது அரசி ஆகச் சூழ்க
வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே. |
எல்லாவற்றிற்கும்
ஆதி காரணமான ஆண்டவன், எல்லா
உலகத்தவரும் உய்யுமாறு கருணை செய்ய நினைந்து இப் பெண்ணைப்
படைத்தான். வானமாகிய அவ்வுலத்திலுள்ள வானோர் தமக்குள் பிரிந்த
சபைகள் ஒன்பது ஆக, ஒவ்வொரு சபைக்கும் ஒவ்வொரு நூறும், சபைகள்
கலந்த பலருள்ளும் ஒரு நூறுமாக ஆயிரம் பேரும், இவ்வுலகில் இவள்
பிறந்த முதல் நாள் தொடங்கி இவள் ஏவலைக் கேட்டு, பிரிதல் இல்லாமல்,
|