|
கடவுள் ஏவியபடியே
இவளைப் பிரியாத அவ்வானவர், இந்த நாளில்
தமது அழகிய முகத்தில் வானுலகத்தின் அழகு தோன்றுமாறு தோன்றி,
அழகிய முறையில் செவ்வொளியைப் பரப்பும் ஆடை அணிந்து, தேனைப்
பொழியும் வாடாத மலர்களை உச்சி முடியில் சூடி, விரும்பியவாறு அணி
அணியாய் நின்ற அவர் அனைவரும், 'ஆண்டவனின் தாயாகிய மரியாள்'
என்னும் வாசகத்தை நிமிர்ந்த மார்பில் தகுந்தவாறு அணிந்து, ஆதவனை
அணிந்ததுபோல அவ்வணியை அணிந்து இன்பமாக நின்றனர்.
| 50 |
தீமமுடைத்
திங்கடுடைத் தொளியைப் பாய்ந்த
நேரடியாள் நேரறப்பூ விள்ளா வண்ணங்
காமமுடைத் தொளியுடுத்துச் சுடரிற் றூய
கருத்திலமை கன்னிநலங் காட்டு தற்கே
தாமமுடைத் தண்டாது மடுவு டைத்துச்
சாய்த்தமது வெள்ளமொடு வாசம் வீசி
யேமமுடைத் தனிவிருதென் றலர்சு வேத
விலீலியெனு மாலைபதத் தொருநூ றுய்த்தார். |
| |
தீமம் உடைத்
திங்கள் துடைத்து ஒளியைப் பாய்ந்த
நேர் அடியாள், நேர் அற, பூ விள்ளா வண்ணம்,
காமம் உடைத்து, ஒளி உடுத்து, சுடரில் தூய
கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே,
தாமம் உடைத் தண் தாது மடு உடைத்துச்
சாய்த்த மது வெள்ளமொடு வாசம் வீசி,
ஏமம் உடைத் தனி விருது என்று, அலர் சுவேத
இலீலி எனும் மாலை, பதத்து, ஒரு நூறு, உய்த்தார். |
ஒளியை உடைய
பிறைச் சந்திரனை ஒளி தேய்த்துத் தன் ஒளியைப்
பரப்பிய அழகிய அடிகளை உடையவள் மரியாள். அவள் நிகரற்ற
தன்மையாய், விரியாத பூவைப்போல், காம விகாரங்களை உடைத்தெறிந்தும்,
ஒளியை அணிந்தும், பகலவனிலும், தூய்மையான கன்னி நலத்தைத் தன்
கருத்தில் கொண்டிருந்தாள். அதைக் குறித்துக் காட்டும் நோக்கத்தோடு,
முதல் அணியினர், ஒளி பொருந்திய குளிர்ந்த இதழ்களால் அமைந்ததும்
பள்ளத்தை
|