| உடைத்துச் சாய்த்த
தேன் வெள்ளத்தோடு மணம் வீசி மலர்ந்ததும் ஆன
வெண்ணிற இலீலி என்னும் மலரால் தொடுத்த நூறு மாலைகளை, இன்பம்
தரும் தனி விருதாக மரியின் அடியில் இட்டு வைத்தனர்.
'மாலை ஒரு நூறு
உய்த்தனர்' எனவே, உய்த்தவர் ஆயிரம்
வானவருள் ஓர் அணியாய் நின்ற ஒரு நூறு வானவர் என்பது போதரும்.
தொடர்ந்து வரும் 'ஒரு நூறு' எல்லாம் இவ்வாறே கொள்க. 59-ம்
பாடலில், 'இம்முறையால் ஒன்பதணி சூழ்ந்து நிற்ப' என்று வருவது
கொண்டும் தெளிக.
| 51 |
இருதியெளிற்
படுத்தியவான் வரத்து வல்லா
ளிவர்வானோர் நிலைகடந்த வன்பு விஞ்சக்
கருதியெழிற் படுத்தியவொன் றாய வெந்தை
கண்ணியமை நேயநலங் காட்டு தற்கே
குருதியெழிற் படுத்தியசெந் தாது லாவுங்
கொழுந்தண்டே னிரோசையெனுங் கோதை கொண்டு
பருதியெழிற் படுத்தியசீ றடியைப் போற்றிப்
பணியாக முற்படைத்தா ரொருநூ றன்றோ. |
| |
இருதி எழில்
படுத்திய வான் வரத்து வல்லாள்,
இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்சக்
கருதி, எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை
கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே,
குருதி எழில் படுத்திய செந்தாது உலாவும்
கொ ழுந் தண் தேன் இரோசை எனும் கோதை கொண்டு,
பருதி எழில் படுத்திய சீறு அடியைப் போற்றிப்
பணி ஆக முன் படைத்தார், ஒரு நூறு அன்றோ. |
சொல்லின்
அழகெல்லாம் வீழ்த்திய மேலான தெய்வ வரங்களால்
வல்லவளாகிய மரியாள், எழுச்சி கொண்ட வானவர் நிலையையும் கடந்த
அன்பில் மேம்படக் கருதி, அழகையெல்லாம் வீழ்த்திய ஒருவனாகிய எம்
தந்தையாம் ஆண்டவனே கருதிப் பார்த்து இவள்பால் அமைத்து வைத்த
அன்பின் நலத்தைக் குறித்துக் காட்டும் நோக்கத்தோடு இரண்டாம்
அணியினர் இரத்தத்தின் நிற அழகை வீழ்த்திய செந்நிற இதழ்களினிடையே
|