| 59 |
இம்முறையா
லொன்பதணி சூழ்ந்து நிற்ப
வெவர்க்குநலஞ் செய்பொழிலோ முகிலோ பானோ
வம்முறையா னிகராதெவ் வுயிரும் யாவு
மமுதினுமூங் கினிதன்பா லோம்புந் தாய்செய்
கைம்முறையா மெனப்பணிபொற் சுடிகை யாரங்
கண்டிகையோ டினக்கலனெண் ணில்லா தேந்தி
மெய்ம்முறையா லொளிர்ந்திறைஞ்சு மீரா றும்பர்
விழைந்திவள்சூ டீரறுமீன் போல நின்றார் |
| |
இம் முறையால்
ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப,
எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ
அம் முறையால் நிகராது, எவ் உயிரும் யாவும்
அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய்
கைம் முறையாம் என, பணி பொன் சுடிகை ஆரம்
கண்டிகையோடு இனக் கலன் எண் இல்லாது ஏந்தி,
மெய் முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர்,
விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார். |
மேலே
காட்டிய இம் முறைப்படி அணிக்கு நூறாக ஒன்பது அணிகள்
சூழ்ந்து நிற்க, வேறுபாடின்றி எல்லோர்க்கும் தம் நலத்தை வழங்கும்
சோலையோ மேகமோ கதிரவனோ என்றாலும் அம்முறைக்கும் ஒப்பாகாத
தன்மையாய், எவ்வுயிரையும் உயிரற்ற பிற எல்லாவற்றையும்
அமுதைக்காட்டிலும் இனிதாக அன்பால் பேணும் தாய்க்குச் செய்யும்
கைம்மாறு போல, வேலைப்பாடு அமைந்த பொன் முடியும் முத்து மாலையும்
பதக்கத்தோடு பல வகை அணிகலன்களும் எண்ணிக்கை இல்லாது ஏந்திக்
கொண்டு, தம் உடலுக்கு உரிய முறையால் ஒளியுடன் விளங்கி வணங்கும்
பன்னிரு வானவர், இவள் தலையில் விரும்பிச் சூடும் பன்னிரு விண்மீன்கள்
போல நின்றனர்.
இது
தொடங்கி, ஒன்பது அணிகளினின்றும் பொறுக்கி ஓரணியாகச்
சேர்த்த பத்தாம் அணியைச் சேர்ந்த வானவர் செயல் கூறப்படுகிறது. |