பக்கம் எண் :

முதற் காண்டம்440

                   65
ஒலிய திரமுடி முடியொடு மடிபட வுவகை யெழவிழ
                     வணிதொடை யசைவொடு
மலிய மதுமழை சலசல வெனவின மணிகள் கண கண
                     வெனவென தணுவுரை
மெலிய நிமலனை மகவுடை யவளுடை வெயிலி னெழுமடி
                       யொளிவடி வடிவடி
பொலிய வவரவர் சிரமிசை யணிகுவர் பொருவி
                     னசையோடு பணிகு வ ரணுகியே
 
ஒலி அதிர முடி முடியொடும் அடிபட உவகை எழ விழ,
                       அணி தொடை அசைவொடு
மலிய மது மழை சலசல என, இன மணிகள் கணகண என,
                     எனது அணு உரை
மெலிய நிமலனை மகவு உடையவளுடை வெயிலின் எழு மடி
                     ஒளி வடி வடிவு அடி
பொலிய அவரவர் சிரமிசை அணிகுவர்; பொருவு இல்
                      நசையொடு பணிகுவர் அணுகியே.

     அவ் வானவர் ஒருவர் முடி மற்றவர் முடியோடும் மோதுவதனால்
உண்டாகும் ஓசை முழுங்குமாறு மகிழ்ச்சி மேலோங்க விழுந்து, தாம்
அணிந்துள்ள மாலைகள் அசைவதனால் பூமாலைகளின்று மிகுதியாகத் தேன்
மழை சல சலவென்று பொழியவும் மணிமாலைகளிலுள்ள பல வகை மணிகள்
கணகணவென்று ஒலிக்கவும், எனது அணுவளவான புகழுரை மெலியுமாறு
ஆண்டவனை மகனாகக் கருவிற் கொண்டுள்ள மரியாளுடைய, கதிரவனைக்
காட்டிலும் ஏழு மடங்கு ஒளி பொழியும் வடிவ அழகு கொண்ட திருவடிகள்
தமக்குப் பொலிவு தருமாறு அவரவர் தம் தலைமீது அணிந்து கொள்வர்;
ஒப்பற்ற ஆசையோடு அணுகி வணங்குவர்.
 
                    66
அரவி னுருவொடு கடிவிடு விடமற வரிதி லுயிர்தரு
                     மினிதமு திவளென
விரவி னிருளினு வடுதரு மிருளற விரவி யொளியினு
                     மொளிர்சுட ரிவளென
வுரவி ழிவுமற வுயிரடு மிகலற வுறுதி யிவளென வுயிரிவ
                     ளெனவிரி
புரவி னிகரில தயவினி னிகரில புணரி யிவளென
                     வறைகுவர் சிலருமே.