பக்கம் எண் :

முதற் காண்டம்442

     பேயின் நீடித்த போர் எழுதலால் உயிர் மெலிவோர், கவலை
அடைவோர், பிள்ளைகள் இல்லாமல் வருந்துவோர், வறுமையால்
வாடுவோர், நோய்களால் மெலிவோர், எதற்கேனும் அஞ்சி உருகுவோர்,
சாவு நெருங்கக் கண்டு சோர்வோர், தம் குடிக்கு வந்த மெலிவோடு
இம்மைக்கும் மறுமைக்கும் ஒன்றாய் வந்து சேர்ந்த இழிவைக் கண்டு
குழைந்து அழுவோர், புலம்புவோர், இறப்போருமாக, இவ்வுலகில்
அத்தகையவர்க்கெல்லாம் உதவிய நன்மை மிகுந்த கடல் இவள் என்று
வேறு சிலர் கூறிப் போற்றுவர்.

     உறி - 'உறீஇ' என்ற அளபெடை ஓசை நீளாமைப் பொருட்டு
இவ்வாறு நின்றது. அழுகுவர் - அழுவர்: இடையே 'கு' சாரியை.
 
              68
ஒளிகொ ளுலகமு முதலிய வுளபல
     வுலகு பொதுவற வனையவு நடவிய
வளிகொ ணதிபதி தனைமக வெனவணி
     யரிய கருவுட னுலகிட ரெரியற
வளிகொள் கவரமு நிழறரு கவிகையு
     மருவு மெமதர சியுமிவ ளெனவரு
டுளிகொள் முகிலென மணமலர் மதுமழை
     சொரிய வடியிணை தொழுகுவர் சிலருமே.
 
ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு
          பொது அற அனையவும் நடவிய
அளி கொள் அதிபதி தனை மகவு என அணி
          அரிய கருவுடன், உலகு இடர் எரி அற
அளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும்
           மருவும் எமது அரசியும் இவள் என, அருள்
துளி கொள் முகில் என, மண மலர் மது மழை
          சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே.

     ஒளி பொருந்திய வானுலகமும் அதனை முதலாகக் கொண்ட பல
உலகங்கள் யாவற்றையும் பிற தெய்வங்களுக்கும் பொது என்ற தன்மை
இல்லாமல் தானே ஆண்டு நடத்திய கருணை கொண்ட தலைவனாகிய
ஆண்டவனைத் தன் மகனாகத் தாங்கிய அரிய கருப்பத்தின் துணையால்,