இவ்வுலகத்துப் பாவத்
துன்பமாகிய நெருப்பு அவியுமாறு கருணை கொண்டு
வீசும் வெண்சாமரையும் நிழல் தரும் குடையுமாக அமையும் எமது அரசியும்
இவளே எனவும், தெய்வ அருளாகிய துளியைக் கொண்டுள்ள மேகமும்
இவளே எனவும், மற்றும் சில வானவர் மணமுள்ள மலர்கள் தேன் மழை
பொழியுமாறு அவளது இரு அடிகளிலும் இட்டு வணங்குவர்.
வெண்சாமரையும்
குடையும் நெருப்பைத் தணிக்க, மழை அதனை
அவிக்கும் என்று கொள்க.
69 |
ஒருவர் கவரிக
ளிடவிட வணுகுவ ரொருவர் கவிகைக
ளெழவெழ மருகுவ
ரொருவர் பணிவிடை முடிதர விழைகுவ ரொருவ
ரிறையவன் விடைமொழி கொணர்குவ
ரொருவ ரெழுதிய முகவெழில் கருதுவ ரொருவ ரதிசய
முறியினி துருகுவ
ரொருவர் புகழிட நிகரில மெலிகுவ ரொருவர்
புகழுவர் பணிகுவ ரெவருமே. |
|
ஒருவர் கவரிகள்
இடஇட அணுகுவர்; ஒருவர் கவிகைகள்
எழ எழ மருகுவர்;
ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர்; ஒருவர் இறையவன்
விடை மொழி கொணர்குவர்;
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர்; ஒருவர் அதிசயம்
உறி இனிது உருகுவர்;
ஒருவர் புகழ்இட நிகர் இல மெலிகுவர்; ஒருவர் புகழுவர்;
பணிகுவர் எவருமே. |
மற்ற
வானவருள் ஒரு சிலர் வெண்சாமரை விடாமல் வீசுவதற்கென்று
நெருங்குவர்; ஒரு சிலர் குடைகளை உயர்த்திப் பிடிக்க நெருங்குவர்; ஒரு
சிலர் அவளுக்கு உற்ற பணிவிடைகளை முடித்துத் தர விரும்புவர்; ஒரு சிலர்
ஆண்டவன் அவளுக்குத் தந்த மறுமொழிகளைக் கொண்டு வருவர்; ஒரு
சிலர் சித்திரமாகத் தீட்டியது போன்ற அவள் முக அழகை ஆராய்வர்; ஒரு
சிலர் அதனைக் கண்டு அதிசயம் கொண்டு இன்பத்தால் உருகுவர்; ஒரு
|