பக்கம் எண் :

முதற் காண்டம்444

சிலர் அவளைப் புகழ்ந்து பேச உவமைப் பொருள் ஒன்றும் இல்லாமையால்
மெலிவர்; ஒரு சிலர் இயன்றவாறு புகழுவர்; பின், எல்லோருமாக அவளைப்
பணிந்து தொழுவர்.

     'ஒருவர்' என்பது 'ஒரு சிலர்' என்ற பொருளில் நின்றது: 'கவரிகள்'
'கவிகைகள்' என வந்த பன்மைப் பொருள்கள் காண்க. 'இடஇட' என்ற
அடுக்கு 'இடையறாமை' குறித்தது, 'மருவுவர்' என்பது 'மருகுவர்' என
இன்னோசைப் பொருட்டும், 'உறீஇ' என்பது 'உறி' என ஓசை நீளாமைப்
பொருட்டும் வந்தன.

 
                    70
பருதி யுடையுடை நலமிக வருளுடை பரம னதிபதி
                     யொருகரு வுடையவள்
சுருதி மொழியெழ வெனதிறை யவனிவை தொகுதி யறவள
                     வறவிடு மளவையி
லிருதி யறவென தறவறி விசைதர வினிய டியனளு
                     மெனமுயல் வதெனவுள்
கருதி நசையொடு கருதிய வுணர்வுகள் கனிய வுணர்தலி
                     லமரரு ளுயருவார்.
 
பருதி உடை உடை நலம் மிக, அருள் உடை பரமன் அதிபதி
                         ஒரு கரு உடையவள்,
'சுருதி மொழி எழ, எனது இறையவன் இவை தொகுதி அற
                           அளவு அறஇடும் அளவையில்,
இருதி அற, எனது அற அறிவு இசைதர, இனி அடியனளும்
                         என முயல்வது?' என உள்
கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில்,
                            அமரர் உள் உயருவார்.

     ஆதவனை ஆடையாகக் கொண்டுள்ள தனது நலம் மேலும் மிகுமாறு,
யாவற்றிற்கும் தலைவனாகிய அருள் கொண்ட ஆண்டவனை ஒப்பற்ற
கருப்பமாகக் கொண்டுள்ள மரியாள். 'வேத வாக்கு நிறைவேறுமாறு, எனது
ஆண்டவன் இவற்றையெல்லாம் தொகை இல்லாமலும் அளவு இல்லாமலும்
எனக்கு ஈந்த தன்மையை நோக்குகையில், அவை சொல்லுக்கு
அடங்காமையால், எனது அற உணர்விற்குப் பொருந்திய வகையில், இனி