அவனது அடியவளாகிய
நானும் நன்றிக் கடனாக என்ன செய்வது?' என்று
தன் உள்ளத்தில் ஆராய்ந்து ஆசையோடு செய்யக் கருதிய உணர்வுகளை
இனிதாகத் தாம் உணர்ந்து கொண்டமையால், அவ்வானவர் தம் உள்ளத்தில்
எழுச்சி கொண்டனர்.
அடியனள் - அடியள்:
இடையே 'அன்' சாரியை.
71 |
அயமும் வழுவையு
மிரதமும் விருதரு மடையு நிருபரு நிகரில
மெலிதர
வயமு மிருமையு மறிவொடு கருணையு மருவு மிறையவ
னொருசிறு மனையிடை
நயமு மொளிமையும் விபவமு மடையலு நடவு மளவையு
மிதுவெனில் வடுவொடு
கயமு நடலையு மலிபுவி யருளொடு கனிய வதுபொழு துயர்கதி
நிகருமே. |
|
அயமும் வழுவையும்
இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்
இல மெலி தர,
வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன்,
ஒரு சிறு மனை இடை,
நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும்
இது எனில், வடுவொடு
கயமும் நடலையும் மலி புவி, அருளொடு கனிய, அது பொழுது
உயர்கதி நிகருமே. |
குதிரையும்
யானையும் தேரும் காலாளுமாகிய நால்வகைப் படையும்
கொண்டுள்ள அரசரும் நிகராகாமல் மெலியுமாறு, வல்லமையும் பெருமையும்
அறிவோடு கருணையும் கொண்டுள்ள ஆண்டவன், ஒரு சிறு வீட்டில்,
இன்பமும் ஒளியும் செல்வமும் மற்றுள்ள யாவும் கூட்டி வைக்கும் தன்மை
இத்தகையது என்றால், பாவத்தோடு கண்ணீரும் துன்பமும் நிறைந்த
இவ்வுலகம், தெய்வ அருளோடு கனியுமாயின், அப்பொழுதே உயர்ந்த
மோட்சகதிக்கு நிகராகி விடும்.
கயம்
- குளம். அது குளத்திலுள்ள நீருக்கு ஆகுபெயராய்
அந்நீருக்கு ஒப்பான கண்ணீரைக் குறித்தது. |