வென்னை விரித்திடு
கூளி நடுக்கிய வேத மொழித்
திறலோன்,
பொன்னை விரித்து அதன்மீது புதைத்த மின் மாலை
இறுத்திய போல்,
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம்
உடுத்து எனை ஆள்
அன்னை விரித்த நிலா உண அத் திறல் தானும் விரித்தனல்
ஆல். |
முதுகுகாட்டி
ஓடுமாறு பேயை நடுங்கச் செய்யும் வேத வாக்கில்
நல்லவனாசிய சூசை, பொன்னைத் தகடாக விரித்து அதன் மீது பதித்த
விண்மீன்களை மாலையாகத் தங்க வைத்ததுபோல், வீணே ஒளி விரித்த
மதியைக் காட்டிலும் சிறந்த நிறத்தோடு விளங்கும் கோலம் அணிந்து
என்னை ஆட்கொள்ளும் அன்னையாகிய மரியாள் பரப்பிய ஒளியைத்
தானும் உண்டமையால், அத்தகைய சிறப்போடு தானும் ஒளியைப்
பரப்பினான்.
வென் - 'வெரிந்'
என்ற சொல் இடை குறைந்து 'வெந்' என்று
ஆகி, எதுகை ஓசைப் பொருட்டு 'வென்' என நின்றது. கொன்னை -
'கொன்' என்ற சொல் சாரியை பெற்றுக் 'கொன்னை' என நின்றது.
'ஆல்' அசைநிலை. மின் - 'மீன்' என்ற சொல்லின் குறுக்கல் விகாரம்.
74 |
ஓசையே ழுந்தக
லோலமெ றிந்தன வாரியு டன்றலெனா
வாசையெ ழுந்தன வோகைய டங்கில தாயலர் தன்கொடிபோல்
பூசையெ ழுந்தந றாமது வம்புகழ் பூசற ரும்படியே
சூசையெ ழுந்துயர் நாயகி தன்றுதி தூவிய றைந்தனனால். |
|
ஓசை எழுந்த கலோலம்
எறிந்தன வாரி உடன்றல் எனா,
ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய், அலர் தன் கொடி போல்,
பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே,
சூசை, எழுந்து உயர் நாயகி தன் துதி, தூவி, அறைந்தனன் ஆல். |
|