பக்கம் எண் :

முதற் காண்டம்45

                  57
ஆம்பல்வாய் நறும்விரை யவிழ்த்து விள்ளிய
வாம்பல்வாய் மலர்ந்தன வணங்கை யாரினி
தாம்பல்வாய்க் குரலுட னாய்ந்து வெண்மதி
யாம்பல்வாய் திருந்துணர் வறைந்து பாடுவார்.
 
ஆம்பல் வாய் நறும் விரை அவிழ்த்து விள்ளிய
ஆம்பல் வாய் மலர்ந்து, அன அணங்கையார், இனிது
ஆம்பல் வாய்க் குரலுடன் ஆய்ந்து, வெண் மதி
ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார் :

     அம் மாதர், தேனின் வழியாக நறுமணத்தைப் பரவவிட்டு மலர்ந்த
செவ்வல்லி மலர் போன்ற வாயைத் திறந்து, வீணையிடத்துப் பிறந்தது
போன்ற குரலுடன் பொருளை இனிது ஆராய்ந்து, வெண்ணிறமான
சந்திரனின் ஒளிபோல் வாய்ந்த திருந்திய உணர்வுகளை எடுத்துக் கூறிப்
பாடுவர் :

     இச்செய்யுளில் 'ஆம்பல்வாய்' என அடிகளெல்லாம்
தொடங்குவதனால் மடக்கு என்னும் சொல்லணி அமைந்து. 'ஆம்பல்'
என்ற சொல் பல பொருளில் அமைந்துள்ள திறம் காண்க.

                     மகளிர் புகழ்ப் பாடல்

     --காய், --காய், --காய், --காய்; மூன்றாமடி இடைமடக்கு
 
                       58
விண்புதைத்த மலர்ப்பணைவாய் விரைகுளித்த தேனொழுகிக்
கண்புதைக்கும் இருட்பொழில்கொள் களிகூர்ந்த நாடிதுவே
களிகூர்ந்த நாடிதுவேல் கண்கடந்த கவினாடி
நளிகூர்ந்த நயனல்கும் வானுலக நாடேமோ.
 
''விண் புதைத்த மலர்ப் பணை வாய் விரை குளித்த தேன் ஒழுகி,
கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு                                            இதுவே:
களி கூர்ந்த நாடு இதுவேல், கண் கடந்த கவின் நாடி,
நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ?-

     ''வானத்தை மூடி மறைத்த மலர்க் கொம்புகளினின்று வாசனையில்
மூழ்கிய தேனை ஒழுகவிட்டு, பார்ப்பவர் கண்களை மூடி மறைக்கும்
இருண்ட சோலைகளைக் கொண்டுள்ள களிப்பு மிகுந்த நாடு இச் சூதேய