நாடே ஆகும் : களிப்பு
மிகுந்த நாடு இது வென்றால், கண்ணுக்கு அடங்காத
அழகையும் நாடி, குளிர்ச்சி மிகுந்த இன்பத்தைத் தரும் வானுலகத்தைத்
தேடாது அமைவோமோ?
கண்ணுக்கு
அடங்கிய இவ்வுலக அழகை நாடி அதனோடு நின்று
விடாமல், இதனைக் கருவியாகக்கொண்டு, கண்ணுக்கு அடங்காத அழகும்
நிலைத்த பேரின்பமும் பயக்கும் வானுலகை நாடுதல் வேண்டும் என்பது
கருத்து. இப்பாடல்கள், முதலிரண்டடிகளை ஒரு பெண்ணும்
பின்னிரண்டடிகளை மற்றொரு பெண்ணும் பாடுவதாக அமைந்துள்ளன.
59 |
நிழல்மூழ்கும்
பூம்பொழில்கண் ணிறமதுகா னின்பமலாற்
குழல்மூழ்கு மிசைதுவைப்பக் கோடருஞ்சீர் நாடிதுவே
கோடருஞ்சீர் நாடிதுவேல் கோதெனக்கோள் புறத்திமைப்ப
வடருஞ்சீர் மல்கியெழும் வானுலக நாடேமோ. |
|
நிழல்
மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இனம் அலால்,
குழல் மூழ்கும் இசை துவைப்ப, கோடு அருஞ் சீர் நாடு இதுவே:
கோடு அருஞ் சீர் நாடு இதுவேல், கோது எனக் கோள் புறத்து
இமைப்ப,
வாடு அருஞ்சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ? |
''நிழலில்
மூழ்கிக் கிடக்கும் பூஞ்சோலை கண்ணுக்கு நிறமும்
வாய்க்குத் தேனும் மூக்கிற்கு வாசனையும் உடலுக்கு இன்பமும்
தருவதல்லாமல், புல்லாங்குழலில் மூழ்கிக் கிடக்கும் இசை காதுக்கு
இன்பமாகவும் ஒலிக்க, இவ்வாறு குறைதற்கு அரிய செல்வச் சிறப்புள்ளது
இச்சூதேய நாடே ஆகும்: குறைவற்ற செல்வச் சிறப்புள்ள நாடு
இதுவென்றால், விண்மீன்களையும் குற்றமுள்ளவை எனப் புறத்தே தள்ளி
மின்னவிட்டு, என்றும் வாடுதற்கு அரிய செல்வமெல்லாம் நிறைந்து உயர்ந்து
விளங்கும் வானுலகத்தைத் தேடாது அமைவோமோ?''
60
|
படநாகந்
தோலுரித்த பான்மையின்கல் லூடுரிஞ்சித்
தடநாகந் தூங்கருவி தாவழகார் நாடிதுவே
தாவழகார் நாடிதுவேல் தரங்கமிலா தருட்பவ்வம்
வாவழகார் திருநிலைத்த வானுலக நாடேமோ |
|