''பட நாகம்
தோல் உரித்த பான்மையின், கல் ஊடு உரிஞ்சி,
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே:
தாவு அழகு ஆர் நாடு இதுவேல், தரங்கம் இலாது அருட்
பவ்வம் வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம்
நாடேமோ? |
''படமுள்ள
பாம்பு தன் தோலைச் சட்டையாகக் கழற்றிய
தன்மைபோல், கல்லின் ஊடே உராய்ந்து வந்து, பெரிய மலை மீது
தொங்கியதுபோல் அருவி பாய்ந்தோடும் அழகு நிறைந்த நாடு இதுவே
ஆகும்: அருவி பாய்ந்தோடும் அழகு நிறைந்த நாடு இது வென்றால்,
அலையே இல்லாமல் அருள் என்னும் கடல் பாய்ந்து பரக்கும் அழகு
நிறைந்து, செல்வமெல்லாம் நிலையாகக்கொண்ட வானுலகத்தைத் தேடாது
அமைவோமோ?''
61
|
பகைதீர்ந்து
சண்பகத்தின் றண்ணிழற்கீழ்ப் பள்ளிவர
மிகைதீர்ந்து புறத்தெவர்க்கும் வேட்கைசெயு நாடிதுவே
வேட்கைசெயு நாடிதுவேல் விரிகாலத் திமிழ்குன்றா
வாட்கைசெயு நிலைமையுள வானுலக நாடேமோ. |
|
''பகை
தீர்ந்து, சண்பகத்தின் தண் நிழற் கீழ்ப் பள்ளி வர,
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு
இதுவே:
வேட்கை செயும் நாடு இதுவேல், விரி காலத்து இமிழ்
குன்றா
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ? |
''பகையும்
தீர்ந்து, துன்பமும் நீங்கப் பெற்று சண்பக மரத்தின்
குளிர்ந்த நிழலின் கீழ் உறக்கம் கொள்ள, வெளி நாட்டிலுள்ள யாவர்க்கும்
ஆசையைத் தூண்டும் நாடு இதுவே ஆகும்: அவ்வாறு ஆசையைத் தூண்டும்
நாடு இதுவென்றால், முடிவில்லாது விரிந்த காலமெல்லாம் இன்பம் குறையாத
வாழ்க்கையைத் தரும் நிலைபேறு கொண்ட வானுலகத்தைத் தேடாது
அமைவோமோ?''
'வேட்கை'
என்றது, வெளிநாட்டார் அங்கு வந்து வாழத் துடிக்கும்
ஆசை. வாட்கை - 'வாழ்க்கை' என்ற சொல் எதுகை நோக்கித் திரிந்தது.
'பள்ளி' என்ற படுக்கையின் பெயர் அதனிற் கொள்ளும் உறக்கத்திற்கு
ஆகுபெயராய் அமைந்தது.
|