பக்கம் எண் :

முதற் காண்டம்450

"வாழி, அனந்த தயாபரனுக்கு உரி வாய்ந்த அருள் தாய்
                                    அவளே!
வாழி, விசும்பு இடை வாழ் உயர் உம்பரின் வாம
                                    இராக்கினியே!
வாழி, முகிண்டு இல பூ அனை கன்னிய மாதரை ஆள்
                                    அரசே!
வாழி, அழுந்து அருளே! மறையே, அறனே, நனி
                                    வாழுதியே!"

     "முடிவில்லாத கருணை கொண்ட ஆண்டவனுக்கு உரிமை வாய்ந்த
அருள் நிறைந்த தாயாய் அமைந்தவளே, நீ வாழ்க! வானுலகில் வாழும்
உயர்ந்த வானவரின் அழகுள்ள அரசியே, வாழ்க! மலராத பூவைப்
போன்ற கன்னிமை கொண்டுள்ள மகளிரை ஆளும் அரசியே வாழ்க!
அழுந்திய அருள் வடிவமானவளே, வாழ்க! வேத வடிவமே, புண்ணிய
வடிவமே, நீ நன்கு வாழ்வாயாக!"

     வாய்ந்த + அருள் - 'வாய்ந்தவருள்' என்பது, 'வாய்ந்தருள்' எனத்
தொகுத்தல் விகாரம் கொண்டது. முகிண்டு - 'முகிழ்ந்து' என்பது போலியாக
'முகிண்டு' என நின்றது. 'கீழ்ந்து' எனற்பாலது, "கீண்டு கொண்டெழுந்
தேகினன் கீழ்மையான்" எனக் கம்பராமாயணத்து வந்ததும் [சுந்., சூளா., 20]
காண்க. கடவுட் காட்சி

 
                    78
என்றன னென்றுபு கழ்ந்துபு கழ்ந்திவை யெண்ணிம
                          கிழ்ந்தனகால்
நின்றன வும்பர டைந்தநி றைந்தநி கர்ந்தில காட்சியெனாத்
தன்றன தாசைத ணந்தத வன்றகை தாங்கிய மார்பிலெழச்
சென்றபி ரான்முக மேமறை யாதுதெ ளிந்துயர் கண்டனனே.
 
என்றனன்; என்று புகழ்ந்து புகழ்ந்து, இவை எண்ணி
                                 மகிழ்ந்தனகால்,
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா,
தன் தனது ஆசை தணந்த தவன், தகை தாங்கிய மார்பில் எழ,
சென்ற பிரான் முகமே மறையாது தெளிந்து உயர் கண்டனனே.