80 |
செகத்திய
லாதசி றப்பெழு நாயகி யைச்செக நாயகனே
யகத்திய லாதவ ருட்கொடு நோக்கிய ருத்தியொ டேவியதால்
முகத்திய லாதந யத்துநி லாவுரு முற்றிய வானவர்சூழ்
நகத்திய லாதம ணிக்கல னாரந யத்தொடு சூட்டினரே. |
|
செகத்து இயலாத
சிறப்பு எழு நாயகியைச் செக நாயகனே
அகத்து இயலாத அருள் கொடு நோக்கி, அருத்தியொடு ஏவியதால்,
முகத்து இயலாத நயத்து, நிலா உரு முற்றிய வானவர், சூழ்
நகத்து இயலாத மணிக் கலன் ஆர நயத்தொடு சூட்டினரே. |
இவ்வுலகில் இயல்பாய்
அமையாத சிறப்புகளால் உயர்ந்த
தலைவியாகிய மரியாளை உலக நாயகனாகிய ஆண்டவனே மக்கள்
உள்ளத்தால் தாங்க இயலாத அருள்கொண்டு நோக்கி, ஆசையோடு
தம்மை ஏவியதனால், ஒளி உருவத்தின் முதிர்ந்த நிலையில் உள்ள வானவர்,
தம் முகத்தில் கொள்ள இயலாத இன்பத்தோடு, உலகத்தைச் சூழ்ந்துள்ள
மலைகளிலெல்லாம் கிடைக்க இயலாத மாணிக்கத்தால் ஆன மாலையை
நிறைந்த இன்பத்தோடு அவளுக்குச் சூட்டினர்.
81 |
தன்னுயி
ராமென வுன்னுத யாபமொ டெண்ணிய மூவுலகார்
மன்னுயிர் யாவையு முள்ளின ளாளொரு மன்னர சாளிவளென்
றென்னுயி ராள்பவன் மின்னிய மீனொளி யெண்ணில வேவியுலா
மின்னுயி ராகிய சென்னியின் மீதொரு மின்முடி சூடினனே. |
|
தன் உயிர் ஆம்
என உன்னு தயாபமொடு, எண்ணியமூ உலகு ஆர்
மன் உயிர் யாவையும், உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள்
என்று,
என் உயிர் ஆள்பவன், மின்னிய மீன் ஒளி எண் இல ஏவி, உலாம்
மின் உயிர் ஆகிய சென்னியின்மீது, ஒரு மின்முடி சூடினனே. |
|