83 |
ஈதி
யாவுமு ணர்ந்தித யத்தெழும்
போதி யாவும்பு ரந்திட நாயகன்
கோதி யாவுந்து டைத்திவண் கொண்டமெய்
நீதி யாவுநி றைந்தவன் கண்டுளான். |
|
ஈது யாவும் உணர்ந்து
இதயத்து எழும்
போது, யாவும் புரந்திட நாயகன்,
கோது யாவும் துடைத்து, இவண் கொண்ட மெய்,
நீதி யாவும் நிறைந்தவன், கண்டு உளான். |
நீதி முறையெல்லாம்
நிறைந்தவனாகிய சூசை, இதையெல்லாம்
உணர்ந்து தன் இதயத்தில் எழுச்சி கொண்டிருந்த போது, பாவம் எல்லாம்
துடைத்து எல்லாவற்றையும் மீட்டுக் காக்கும் பொருட்டு ஆண்டவன்
இவ்வுலகில் மரியாளின் வயிற்றில் எடுத்துக் கொண்ட உடல் உருவத்தையும்
தெய்வக் காட்சியாகக் காணும் பேறு பெற்றான்.
84 |
பளிக்கு
மஞ்சிகத் தூடுறை பான்மணி
வெளிக்கு மஞ்சற வேய்ந்தது போலுல
களிக்கு நாதன மைத்தமெய் தாய்வயிற்
றொளிக்குள் மாதவ னோர்ந்துகண் டானரோ. |
|
பளிங்கு மஞ்சிகத்து
ஊடு உறை பால் மணி
வெளிக்கு மஞ்சு அற வேய்ந்தது போல், உலகு
அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று
ஒளிக்குள் மாதவன் ஓர்ந்து கண்டான் அரோ. |
கண்ணாடிச்
செப்பினுள் இருக்கும் பால் நிறுத்து மணியாகிய வைரம்
மறைவு இல்லாமல் வெளியே தோன்றுவது போல், இவ் வுலகத்தைக் காக்கும்
ஆண்டவன் தனக்கென அமைத்துக் கொண்ட உடல் உருவத்தைத் தன்
தாய் வயிற்றில் எழுந்துள்ள ஒளிக்குள்ளே பெருந் தவத் தோனாகிய சூசை
உள்ளவாறு உணர்ந்து கண்டான்.
பளிங்கு
+ மஞ்சிகம் - பளிக்குமஞ்சிகம். மஞ்சு - மேகம்; இங்கு
ஒளியை மறைக்கும் அதன் தன்மை குறித்து நின்றது. |