பக்கம் எண் :

முதற் காண்டம்460

     'புறப்படும்' என்றது, உவமப் பொருளுக்கு ஏற்ப, 'வான் நோக்கிச்
சென்று சேர்ந்திருக்கும்' என உரை விரிக்கப்பட்டது.
 
             95
இருத்தி வாழுயி ரேவியுட் டூண்டிய
வருத்தி யாலிள வற்பதத் தர்ச்சனை
திருத்தி வீழ்ந்தனன் சென்னிநி லம்படக்
கருத்தி லார்ந்தம றைக்கொழு கொம்பினான்.
 
இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய
அருத்தியால், இளவல் பதத்து அர்ச்சனை
திருத்தி, வீழ்ந்தனன் சென்னி நிலம் பட,
கருத்தில் ஆர்ந்த மறைக் கொழு கொம்பினான்.

     தன் கருத்தில் நிறைந்துள்ள வேதக் கொடி படர்வதற்குக் கொழு
கொம்பாகிய சூசை, ஆண்டவனால் இருத்தப் பெற்று வாழும் தன் உயிர்
தன் உள்ளத்தை ஏவித் தூண்டிய ஆசையால், தாய் வயிற்றிலிருந்த
திருமகனின் அடிக்குத் திருந்திய வணக்கம் புரிந்து, தன் தலை
தரையிற்பட வீழ்ந்தான்.

    அர்ச்சனை - அருச்சனை: "ரழ ... தனிக் குறில் அணையா," என்ற
(நன்னூல் 119) விதிக்கு புறம்பாக ஓசை கருதி வந்துள்ளது; புதியது
புகுதலாகக் கொள்க.
 
               96
வீழ்ந்த வாசையின் மீண்டெழுந் தானரு
ளாழ்ந்த காட்சியொன் றின்றியு மண்டையிற்
றாழ்ந்த காந்தையைக் கண்டத வத்தினேன்
சூழ்ந்த யாவையுஞ் சூழ்ந்துளத் தோங்கினாள்.
 
வீழ்ந்த ஆசையின் மீண்டு எழுந்தான்; அருள்
ஆழ்ந்த காட்சி ஒன்று இன்றியும், அண்டையில்
தாழ்ந்த காந்தையைக் கண்ட தவத்தினோன்,
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான்