ஐயம் நீங்கப்
பெற்றும் ஆண்டவன் அவதாரப் பிறப்பை எதிர்
நோக்கியும் சூசை முனிவனும் கன்னி மரியாளும் மகிழ்ந்த செய்தியைக்
கூறும் பகுதி.
திருமகன்
உயர்வு கருதிய சூசையின் உருக்கம்
கூவிளம்,
- விளம், கூவிளம், - விளம்
1 |
இன்னயா
வையுமுளத் தெண்ணியெண் ணியநிலைக்
குன்னலா லுளமுயர்ந் தின்பறா துருகுவான்
பன்னலா லடைவரும் பண்படைந் துயரினாள்
துன்னலா லடைநயன் சூழ்ந்தமா தவநலோன். |
|
இன்ன யாவையும்
உளத்து எண்ணி, எண்ணிய நிலைக்கு
உன்னலால் உளம் உயர்ந்து, இன்பு அறாது உருகுவான்,
பன்னலால் அடைவு அரும் பண்பு அடைந்து உயரினாள்
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மாதவ நலோன். |
சொல்லுதலால்
முடிவதற்கு அரிய பண்புகளை அடைந்ததனால்
உயர்ந்துள்ள மரியாள் தனக்குத் துணைவியாகக் கிடைத்தமையால் தான்
அடைந்த நன்மைகளை ஆராய்ந்த பெருந்தவமுள்ள நல்லோனாகிய சூசை,
நிகழ்ந்த இவையெல்லாம் தன் உள்ளத்தில் எண்ணிப் பார்த்தான், அவ்வாறு
எண்ணிய நிலையைத் தான் அடையக் கருதுதலால் உள்ளம் உயர்ந்து,
இன்பம் நீங்காத நிலையில் உருகுவான்.
2 |
முந்தையா
முதலினோன் மூவிடத் தொருவனாய்த்
தந்தையா வருமிலா கன்னியின் றனயனா
மெந்தையா னிவண்வளர்த் தெற்கிதோ வியல்பெனாச்
சிந்தையா லுருகிமீண் டாய்ந்தசொற் செப்பினான். |
|