'முந்தை ஆம்
முதலினோன், மூ இடத்து ஒருவன் ஆய்,
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம்
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு?'
எனாச்
சிந்தையால் உருகி, மீண்டு ஆய்ந்த சொல் செப்புவான்: |
'யாவற்றிற்கும்
முந்திய பொருளாம் முதற் காரணனாகிய ஆண்டவன்,
மூவுலகிற்கும் தான் ஒருவனே தலைவனாய் இருந்து, தனக்குத் தந்தை
என்ற தன்மையுடையார் எவரும் இல்லாமல் ஒரு கன்னியின் மகனாய்ப்
பிறக்கும் என் தந்தையாகிய அவனை நான் இவ்வுலகில் வளர்ப்பதாகிய
இது எனக்கு இயலுவதோ?' என்று உள்ளத்தில் உருகி, மீண்டும் ஆராய்ந்து
கண்ட சொற்களைப் பின் வருமாறு கூறுவான்.
'வளர்த்து இது
எற்கு இயல்போ?" என மாறிக் கூட்டுக. 'வளர்' என்ற
பகுதியடியாக 'வளர்தல்' எனத் தன்வினையும் 'வளர்த்தல்' எனப்
பிறவினையும் அமையுமேனும், 'வளர்த்துதல்' என்ற பிறவினை அமைப்பும்
வழக்கில் உள்ளமை நோக்குக.
3 |
வானுநே ராதுமா
றாவரத் தோங்கிவான்
மீனுநே ராதுமெல் லாக்கைகண் டேந்தியூர்
தேனுநே ராதுதேர் தீஞ்சொலைச் செப்பவே
நானுநே ராகிநா ணாதுகேட் பேன்கொலோ. |
|
"வானும் நேராது
மாறா வரத்து ஓங்கி, வான்
மீனும் நேராது மெல் ஆக்கை கண்டு, ஏந்தி, ஊர்
தேனும் நேராது தேர் தீம் சொலைச் செப்பவே,
நானும் நேர் ஆகி, நாணாது கேட்பேன்கொலோ? |
"மாறாத வரத்தினால்
வானுலகும் ஒப்பாகாத தன்மையாய் ஓங்கி, விண்
மீனும் ஒப்பாகாத தன்மையாய் அத்திருமகனின் மெல்லிய உடலை என்
கண்களாற் கண்டு, கைகளால் ஏந்தி, மலர்களில் இயங்கும் தேனும் ஒப்பாகாத
தன்மையாய்த் தெளிந்த இனிய சொல்லை அத்திருமகன் பேசவே, நானும்
ஒரு தந்தை என்பது போல் நிமிர்ந்து நின்று, நாணமில்லாமல் கேட்பேனா?
'நாணம்'
திரு மகனின் பெருமையும் தனது சிறுமையும் கருதியது. |