4 |
வேதமே
வேடமாய் வேய்ந்தமா தவரெலா
மேதமே தீர்க்குவா னீங்குநா டியபிரான்
பாதமே பாவிநான் பார்க்கவுந் தலையினென்
கேதமே தீரமேற் சூடவுங் கெழுமுமோ |
|
"வேதமே வேடமாய்
வேய்ந்த மா தவர் எலாம்,
ஏதமே தீர்க்குவான் ஈங்கு நாடிய பிரான்
பாதமே பாவி நான் பார்க்கவுப், தலையின் என்
கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ? |
"வேதமே தமக்கு
வடிவமாய் அணிந்து கொண்ட பெரிய
தவத்தோரெல்லாம், பாவங்களையெல்லாம் போக்குமாறு இவ்வுலகில்
அவதரித்து வரவேண்டுமென்று எதிர்பார்த்திருந்த ஆண்டவனின்
திருவடியைப் பாவியாகிய நான் பார்க்கவும், என் துன்பமெல்லாம் தீருமாறு
தலையின்மேல் அணிந்து போற்றவும் தகுவேனோ?
5
|
நீருலா
முலகினோர் நீண்டசெங் கதிரவன்
றேருலா முலகினோர் சேர்ந்துபோற் றியநிலா
வேருலா மடியினா ளெய்தியெய் தியநலஞ்
சீருலா மடியினா றீஞ்சொலா ரடைவரோ. |
|
"நீர் உலாம்
உலகினோர் நீண்ட செங் கதிரவன்
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய, நிலா
ஏர் உலாம் அடியினாள் எய்தி, எய்திய நலம்,
சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ? |
கடல் சூழ்ந்து
உலாவும் இம்மண்ணுலகத்தவரும் நீண்ட செந்நிறக்
கதிர்களை உடைய கதிரவனின் தேர் உலாவும் விண்ணுலகத்தவரும்
ஒருங்கே போற்றியவளும், மதியின் மீது நின்ற அழகு தங்கும் அடியை
உடையவளுமாகிய மரியாளை மனைவியாக அடைந்து, அதன்மூலம் நான்
அடைந்துள்ள நன்மையை, இனிய சொல்லில் வல்ல பாவலரும் சீர் என்னும்
செய்யுள் உறுப்பால் அமையும் அடிகளைக் கொண்டு அமைத்த பாக்களின்
இன்பத்தாலும் அடைவரோ? |