|
மாட்சியால்
ஓங்கு பூ வாகையான், எண் அருங்
காட்சியால் ஓங்கி, முன் கண்ட யாவும் தரும்
சூட்சியால், ஓங்கு தன் தூய மாதேவியைத்
தாட்சியால் ஓங்கு உளத்து ஓர்ந்ததே சாற்றுவான்: |
மாண்புகளால்
உயர்ந்த மலர்க் கொடியை உடையவனாகிய சூசை,
எண்ணுவதற்கு அரிய தெய்வக் காட்சியால் எழுச்சி கொண்டு, முன் கண்ட
யாவும் தனக்குத் தரும் ஆலோசனையால், தன் உள்ளத்தில் உயர்ந்து நின்ற
தன் தூய பெருமைக்குரிய மனைவியைப் பற்றி, தாழ்மையால் உயர்ந்து நின்ற
தன் உள்ளத்தில் உணர்ந்ததைப் போற்றிப் பின்வருமாறு கூறுவான்:
சூழ்ச்சி, தாழ்ச்சி,
என்பன எதுகைப் பொருட்டு, சூட்சி, தாட்சி என
நின்றன.
8 |
தூயுலா
மிந்துலாஞ் சொக்குலாம் பாதமுஞ்
சேயுலாம் பானுலாஞ் சீருலாம் தேகமும்
மீயுலா மீனுலா மின்னுலாஞ் சென்னியு
மோயிலா திற்றெலா முற்றமா மாட்சியாய். |
|
"தூய் உலாம்
இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும்,
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும்,
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும்.
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய்! |
"தூய்மை பொருந்திய
பிறைமதிமீது பதித்த அழகுள்ள அடியும்,
செந்நிறக் கதிரோடு உலாவும் கதிரவனே பொருந்தியது போன்ற ஆடைச்
சிறப்பு அமைந்த மேனியும், வானில் உலாவும் விண்மீன்கள் முடியாகப்
பொருந்தி ஒளியோடு விளங்கும் தலையுமாக, இவையெல்லாம் என்றும்
நீங்காது கொண்டுள்ள சிறந்த மாண்பு உடையவளே!
'இந்து' என்ற
மதியின் பெயர் பிறை மதியையும், 'சேய்' என்று
செந்நிறப் பெயர் அந்நிறக் கதிரையும், 'சீர்' என்ற சிறப்பின் பெயர்
ஆடைச் சிறப்பையும் குறித்தன.
|