"உலகங்களெல்லாம்
முடிவில்லாது போற்றும் ஒரே கடவுளான
ஆண்டவன், தனது மாறாத தயவினால் அவதரித்து வந்து, தக்க காரணம்
ஒன்றும் இல்லாமலே, பேறும் இல்லாத பெருமையும் இல்லாத பேதையாகிய
என்னை, இதோ, உன்னை முன்னிட்டு, அளவில்லாத செல்வத்தை நான்
அடையுமாறு தானாகவே தெரிந்து கொண்டான்!
11 |
வானகற்
துற்றுநின் றோர்வணங் குன்வளம்
யானகத் துற்றில னேவல்கொண் டேனினைத்
தேனகத் துற்றருட் சீர்மையா னீபொறுத்
தூனகத் துற்றவுன் சேயொடா ளென்னையே. |
|
"வானகத்து உற்று
நின்றோர் வணங்கு உன் வளம்
யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை;
தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து,
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே. |
"வானுலகத்தில்
பொருந்தி வாழ்வோராகிய வானவரும் வணங்கும் உன்
பெருமையை நான் உள்ளத்தில் உணர்ந்து கொள்ளாமல் உன்னை ஏவல்
கொண்டேனே; தேன் போல் இனிய உன் உள்ளத்திற் கொண்ட கருணையின்
சிறப்பால் நீ அதனைப் பொறுத்து, உடலெடுத்து உன் வயிற்றில்
அமைந்துள்ள உன் மகனோடு சேர்ந்து, நீயே இனி என்னை அடிமையாகக்
கொண்டு ஆள்வாயாக.
உற்ற
+ அருள் - 'உற்றவருள்' என வரவேண்டியது, 'உற்றருள்'
எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.
12 |
தாயுநீ
தலைவிநீ தாழ்விலாத் தயவெலா
மீயுநீ பரியுநீ யிட்டவென் குறையெலாந்
தேயுநீ கருணையாஞ் சேயொடன் பலையினுட்
டோயுநீ யெனையுநீ யாளெனாத் தொழுதுளான். |
|