பக்கம் எண் :

முதற் காண்டம்470

     "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு"
என்ற குறள் (350) இங்கு நினைக்கத் தக்கது.

           - மா, - மா, - மா, - மா, - மா, - மா

 
                     14
தொழுதேல் தொழுதே லிறைவற் றொழுதா னன்றென்றாலும்
பழுதே தவிர்சூற் பயனாற் பரம னென்னோ டொன்றாம்
பொழுதே தொழுதா லெனக்கே புரியோர் பணிவா மென்னா
வழுதே யழுதே தொழுதா ளமரர்க் கரசா ளென்பாள்.
 
"தொழுதேல், தொழுதேல்! இறைவன் தொழுதால் நன்று என்றாலும்,
பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம்
பொழுதே தொழுதால், எனக்கே புரி ஓர் பணிவு ஆம்" என்னா
அழுதே அழுதே தொழுதாள், அமரர்க்கு அரசாள் என்பாள்.

     வானவர்க்கு அரசியாகிய மரியாள், சூசை தன்னைத் தொழக் கண்டு,
"தொழாதீர்! தொழாதீர்! ஆண்டவனைத் தொழுதால் அது நல்லதேயாயினும்,
பழுது நீங்கிய இக்கருப்பத்தின் பயனாக ஆண்டவன் என்னோடு
ஒன்றாயிருக்கும் பொழுது அவ்வாண்டவனையே குறித்துத் தொழுதாலும்,
எனக்கே செய்த ஒரு வணக்கம் போல் தோன்றும்" என்று அழுதழுது
அவனைத் தொழுதாள்.

     தொழுதேல் - 'தொழு' என்ற பகுதியடியாகப் பிறக்கும் 'தொழேல்'
என்ற எதிர்மறை ஏவல் வினைமுற்று 'தொழுது' என்பது பகுதி போலக்
கொண்டு தொழுதேல் என அமைந்துள்ளது. இறைவன் + தொழுதால்:
'இறைவனைத் தொழுதால் என்ற பொருளில் 'இறைவற் றொழுதால்' என
நின்றது.
 
                       15
பைந்தா ளுயர்தா மரைபோற் பிறைமேற் படிபொற் பதத்தாள்
நொந்தா ளென்னாத் தானு நொந்தா மென்றா னென்றாற்
செந்தாள் நோகப் பணிநீ செய்யா தடியேன் முடிப்பத்
தந்தாள் பவளே தயைசெய் தருள்வா யென்றான் முனிவன்.