பக்கம் எண் :

முதற் காண்டம்471

 
பைந் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன்
                                         பதத்தாள்
நொந்தாள் என்னா, தானும் நொந்து, ஆம் என்றான் என்றால்
"செந் தாள் நோகப் பணி நீ செய்யாது, அடியேன் முடிப்பத்
தந்து, ஆள்பவளே, தயை செய்து அருள்வாய்" என்றான்                                          முனிவன்.

     பசுமையான தண்டின்மீது எழுந்து நிற்கும் தாமரை மலர் போல்
பிறைமீது படிந்த பொன் ஒத்த அடிகளை உடைய மரியாள்
வருந்தினாளென்று சூசை மாமுனிவன் கண்டு தானும் நொந்து, அதற்கு
ஆமென்று இசைவு தெரிவித்தானாயினும், "என்னை ஆள்பவளே, உனது
செந்நிறமான கால்கள் நோக வேலை ஒன்றும் நீ செய்யாமல், உனது
அடிமையாகிய நானே எல்லாம் செய்து முடிக்க விடை தந்து, எனக்கு
இந்தத் தயவை மட்டும் செய்தவருள்வாய்" என்றான்.

     ஆம் எனல் - இசைதல், பதம் - 'பாதம்' என்பதன் குறுக்கல்
விகாரம்.

 
                     16
துன்றா யபணித் தொழிலென் றொழிலே யென்றா ளவளா
மென்றா யெளிமைத் தகவெய் துதற்கே யிருவர் தம்மிற்
பின்றா முறையா லிசலிப் பெரிதும் பருமுள் வியப்பச்
சென்றா யபணித் தொழிலைச் செயமுன் னுவரச் சான்றோர்.
 
"துன்று ஆய பணித் தொழில் என் தொழிலே" என்றாள் அவளும்.
என்று ஆய், எளிமைத் தகவு எய்துதற்கே இருவர் தம்மில்
பின்றா முறையால் இசலி, பெரிது உம்பரும் உள் வியப்பச்
சென்று, ஆய பணித் தொழிலைச் செய முன்னுவர் அச்சான்றோர்.

     அவளும், "இல்லறத்தோடு பொருந்தியுள்ள பணிவிடைத்
தொழிலெல்லாம் எனக்கு உரிய தொழிலே ஆகும்" என்றாள்.