பக்கம் எண் :

முதற் காண்டம்474

     தக்க ஒரு பொருளால் இட்டு நிறைத்த பொற் பாத்திரம் ஏதேனும் ஓர்
ஓசை தருமோ? நூல் வல்லோர் தம் பெருமை பேசார். நுண்ணிய மாண்பு
தம்பால் நுழைவதற்கு இடமான அறத்தைக் கைக்கொண்ட மேலோர் தம்
உயர்ச்சியைப் பிறர் எடுத்துப் பேசுதலையும் விரும்பார். விரும்பாது விட்டுச்
செல்வாரை விடாது தொடரும் அவர்தம் நிழலைப் போல், எவ்விடத்தும் தன்
புகழைத் தேடாத பொழுதே அப்புகழ் அவர்களைத் தொடரும்,

     நுழைகின்ற + அறம் - 'நுழைகின்றவறம்' என வர வேண்டியது
தொகுத்தல் விகாரமாய் 'நுழைகின்றறம்' என நின்றது.

 
                     20
ஈதே மறைநூ லென்னா வறைதற் கிறையோன் வந்தப்
போதே யெளிமை புணரக் கண்டந் தணிவிற் பொலிவோர்
கோதே கொணராள் வினையைக் குணியா குனிதாழ் வினையே
நீதே யெனவந் நெறிநின் றொழுகற் கிசலா நின்றார்,
 
ஈதே மறைநூல் என்னா அறைதற்கு இறையோன் வந்து, அப்
போதே எளிமை புணரக் கண்டு, அத் தணிவில் பொலிவோர்,
கோதே கொணர் ஆள் வினையைக் குணியா, குனி தாழ் வினையே
நீதே என, அந் நெறி நின்று ஒழுகற்கு இசலா நின்றார்.

     இதுவே வேத நூல் முறை எனறு சொல்லும் பொருட்டு
ஆண்டவன்தானே எளிய மனிதனாய் வந்தமையால், அப்போதே
எளிமையின் மேன்மையை மேற்கொள்ளக் கண்டு, அதே தாழ்மையில்
சிறந்து விளங்குவோராகிய சூசையும் மரியாளும், குற்றமே கொணரும் பணி
கொள்வதாகிய ஆளும் வினையைக் கருதாமல், குனிந்து பணி செய்வதாகிய
தாழும் வினையே நீதியென்று கருதி, அந்நெறியைக் கடைப்பிடித்து
ஒழுகுவதற்குத் தமக்குள் போட்டி போட்ட வண்ணமாய் நின்றனர்.