நீது : 'நீதம்'
என்ற சொல்லின் கடைக் குறை. என்னா, இசலா என்பன
'செய்யா' என்னும் வாய்பாட்டு இறந்த கால உடன்பாட்டு வினையெச்சங்கள்.
குணியா - 'குணியாது' என்பதன் ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.
21 |
பன்னாட்
கொருநாள் மனையாள் மனையைப் பரிவாய் விளக்க
முன்னாட் கிணையா முனிவோன் கண்டே முதலோன் சூல்கொள்
ளன்னாட் கிதுவே முறையோ வென்றா னவளு முறையீ
தின்னாட் கிறையா நினக்கோ வெனவத் தொழிலை முயன்றாள். |
|
பல் நாட்கு ஒரு
நாள், மனையாள் மனையைப் பரிவாய் விளக்க
முன் நாட்கு இணையா, முனிவோன் கண்டே, "முதலோன் சூல் கொள்
அன்னாட்கு இதுவே முறையோ?" என்றான். அவளும், "முறை ஈது
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ?" என, அத்தொழிலை முயன்றாள். |
மேற் கூறியவாறு
நிகழ்ந்து வந்த பல நாட்களுக்குள் ஒரு நாள், தன்
மனைவியாகிய மரியாள் ஆர்வத்தோடு தன் இல்லத்தைத் தூய்மை செய்து
கொண்டிருக்க, முற்காலத்து நிகராகாத முனிவன் அதனைக் கண்டு,
"ஆண்டவனைக் கருப்பமாய்க் கொண்டுள்ள அத்தகையவளுக்கு இது
முறையாகுமோ?" என்று தடுக்க முற்பட்டான். அவளும்,
"இத்தகையவளுக்குத் தலைவராகிய உமக்கு இத்தொழில் செய்வது
முறையோ??' என்று கேட்ட வண்ணம் அத்தொழிலைத் தானே செய்து
முடித்தாள்.
22
|
உனதே யெனதே
யில்லா தில்லில் லொருநாள் பணிப்பால்
தனதே யெனமா தவனே செய்தான் றவறா திந்நன்
றெனதே யென்றா ளமரர்க் கரசா ளிதுநன் றென்றால்
நினதே யென்பாய் கொல்லோ நிருபற் கிதுவென்
றுழைத்தான். |
|