|
உனதே எனதே இல்லாது,
இல்லில் ஒரு நாள், பணிப் பால்
தனதே என, மா தவனே செய்தான். "தவறாது, இந் நன்று
எனதே" என்றாள் அமரர்க்கு அரசாள். "இது நன்று என்றால்
நினதே என்பாய் கொல்லோ? நிருபற்கு இது" என்று
உழைத்தான். |
அது உன்னுடையது
இது என்னுடையது என்ற பாகுபாடு இல்லாமல்,
தன் இல்லத்தில் ஒரு நாள், வேலையின் பகுதி தன்னுடையதே என்று
கொண்டு, பெருந் தவத்தோனாகிய சூசைய வேலையில் ஈடுபட்டான்.
வானவர்ககு அரசியாகிய மரியாள் குறுக்கிட்டு, "தவறுக்கு இடமே
இல்லாமல், இந்த நல்தொழில் மனையாளாகிய எனக்கே உரியது" என்றாள்.
சூசையோ, "இது நல்லது என்றால், உனக்கே உரியது என்பாயோ?
மன்னனாகிய எனக்கே இது வேண்டும்" என்று சொல்லிய வண்ணம்
தொடர்ந்து அத்தொழிலைச் செய்தான்.
மரியாள் தன்னை
மன்னனென்று முன்னும், அத்தொழிலை
நல்லதென்று இப்பொழுதும் கூறியதைச் சாக்காகக் கொண்டு, அவ்விரு
வகையிலும் சூசை அதற்கு உரிமை பாராட்டினான்.
23 |
வண்டா யிரஞ்செஞ்
சுடர்தோன் றியமுன் வந்தே கமலத்
தண்டா தினைத்தாங் குடைந்தூ றியதே னுண்ணுந் தன்மைத்
தொண்டா தவிழ்பூங் கொடியோ னுறங்கின் றவடா
மரைக்கண்
விண்டா குதல்முன் விழையும் பணியே யெல்லா முயல்வான். |
|
வண்டு ஆயிரம்,
செஞ் சுடர் தோன்றிய முன் வந்தே கமலத்
தண் தாதினைத் தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்
மைத்து,
ஒண் தாது அவிழ் பூங் கொடியோன் உறங்கு இன்று, அவள்
தாமரைக்
கண் விண்டு ஆகுதல் முன், விழையும் பணியே எல்லாம்
முயல்வான். |
|