|
அயர்வாள் தாயோ?'
என்னா அன்போடு இரக்கு உற்று,
அம் சேய்,
துயர் வாடு அகமே துன்பு அற்று அலரத் தூது ஏவிய ஓர்
உயர் வானவன், உற்று, ஒரு நாள் வளன் அப் பணியைச்
செய்யப்
பெயர்வு ஆயின கால், பிழி வாய் மலரே பிளிரச்
சொல்வான்: |
அழகிய மகனாகிய
ஆண்டவன், 'என் தாய் இவ்வாறு சோர்வாளோ?"
என்று அன்போடு இரக்கமும் கொண்டு, துயரத்தால் வாடும் அவள் மனம்
துன்பம் நீங்கி மலருமாறு தூதாக ஓர் உயர்ந்த வானவனை ஏவினான்;
அவ்வானவன் ஒரு நாள் சூசை அந்த வேலையைத் தான் செய்யவென்று
இடம் பெயர்ந்து சென்றபோது அங்கு வந்து, தன் வாயாகிய மலர்
சொல்லாகிய தேனைச் சொட்டியவிதமாய்ப் பின் வருமாறு சொல்வான்:
'அயர்வாளோ?
என்றது, 'அயரத் தகுமோ?' என்ற கருத்தை
உட்கொண்டது. இரக்கு - 'இரக்கம்' என்பதன் கடைக்குறை. உயர்
வானவன். கபிரியேல் போல், அதிதூதன் என்ற நிலைக்கு உரிய
வானவன். 'அப்பணி' என்பது, முந்திய பாடலிற் குறித்தவாறு, இல்லறத்தில்
மனையாளுக்கே உரிய பணி.
27 |
நுணிக்
கொம் பினுமூக் கினர்நொந் திறப்பா ரனைய வூக்கங்
குணிக்கும் பருமா னிடருங் குணியா கெட்டா ரென்னாக்
கணிக்கும் பரிசாற் கடவுள் மனுவா யெளிமை காட்டத்
தணிக்கும் பரிசாற் றாய்தண் டொழில்செய் யாதாற் றகவோ. |
|
"துணிக் கொம்பினும்
ஊக்கினர் நொந்து இறப்பார்; அனைய ஊக்கம்
குணிக்க, உம்பரும், மானிடரும், குணியா, கெட்டார் என்னாக்
கணிக்கும் பரிசால், கடவுள் மனுவாய் எளிமை காட்டத்
தணிக்கும் பரிசலால், தாய் தண் தொழில் செய்யாதால், தகவோ? |
"மரத்தின் நுனிக்
கொம்பிற்கு உச்சியிலும் ஏறமுயன்றவர் கீழே
விழுந்து நொந்து இறப்பர். அத்தகைய முயற்சியைக் கருதி, அதனால் வரும்
தீங்கைக் கருதிப் பாராமையால், வான வரும் மானிடரும் கெட்டனர் என்று
|