கணிக்கும் தன்மையாலும்,
எளிமையின் நன்மையை மக்களுக்கு எடுத்துக்
காட்டக் கடவுளே மானிடனாகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்
தன்மையாலும், அக் கடவுளின் தாய் தாழ்மையான தொழிலைச் செய்யாது
விடுத்தால், அது அவளுக்குப் பெருமை ஆகுமோ?
"நுனிக் கொம்பர்
ஏறினார் அஃது இறந்து ஊக்கின், உயிர்க்கு இறுதி
ஆகி விடும்" என்பது குறள் (476). நுணி - 'நுனி' என்ற சொல்லின் போலி.
குணிக்க + உம்பரும் - 'குணிக்க வும்பரும்' என வரவேண்டியது, தொகுத்தல்
விகாரமாய்க் 'குணிக் கும்பரும்' என நின்றது. உம்பர் கெட்டது: 28-வது,
ஞாபகப் படலம், 108 - 121 காண்க.
28 |
செல்லா ருலகிற்
குயர்வா ழெமக்குஞ் சேலார் கடல்சூழ்
கல்லா ருலகுற் றவர்க்குங் கனியின் பியற்றுங் கருணை
வல்லா ரியமா மடவாள் வருந்துந் துயரங் கண்டும்
வில்லா ரறிவோய் விழையுந் தொழிலை விடலா காதோ. |
|
"செல் ஆர் உலகிற்கு
உயர் வாழ் எமக்கும், சேல் ஆர்
கடல் சூழ்
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும்
கருணை
வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும்,
வில் ஆர் அறிவோய், விழையும் தொழிலை விடல்
ஆகாதோ? |
"ஒளி நிறைந்த
அறிவு உடையவனே, மேகங்கள் நிறைந்த
வானுலகிற்கும் மேலுள்ள மோட்சவுலகில் வாழும் வானவராகிய எமக்கும்,
மீன்கள் நிறைந்த கடலால் சூழப்பட்டு மலைகளால் நிறைந்த
இம்மண்ணுலகிலுள்ள மானிடர்க்கும், கனிந்த இன்பத்தைத் தரும்
கருணையில் வல்ல, சிறந்த அழகிய இம்மங்கை வருந்தும் துயரத்தைக்
கண்டபின்னும், தானே விரும்பிச் செய்யும் இல்லறப் பணித் தொழிலை
அவளுக்கே விட்டுவிடுதல் ஆகாதோ?
29 |
இன்பால்
வானேத் திவளை நீயேற் றுதனன் றன்றோ
வன்பால் விழைதண் டொழிலை யன்னா ளரிதாற் றிடலே
தன்பா லெனத்தாய் தனய னினிவாழ்ந் துணவேர்த் துழைத்த
லுன்பா லெனவாண் டகையே வினனென் றுரைசெய்
தொழிந்தான். |
|