|
"இன்பால் வான்
ஏத்து இவளை நீ ஏற்றுதல் நன்று
அன்றோ?
அன்பால் விழை தண் தொழிலை அன்னாள் அரிது
ஆற்றிடலே
தன் பால் என, தாய் தனயன் இனி வாழ்ந்து உண வேர்த்து
உழைத்தல்
உன் பால் என ஆண்டகை ஏவினன்" என்று உரைசெய்து
ஒளிந்தான |
"இன்பத்தோடு
வானுலகமும் போற்றும் இவளை நீ போற்றதலும்
நல்லதே அல்லவா? ஆயினும், அன்போடு தானே விரும்பும் தாழ்மைத்
தொழிலைத் தானே அரிய முறையில் செய்தல் அவள் பக்கம் சார்ந்தது
எனவும், தாயும் மகனும் இன்பமாய் வாழ்ந்து உண்ணுமாறு உடல் வியர்க்க
உழைத்தல் உன் பக்கம் சார்ந்தது எனவும் ஆண்டவனே
கட்டளையிட்டான்" என்று கூறி அவ்வானவன் மறைந்தான்.
'வாழ்ந்து
உண' என்பதனை, 'உண்டு வாழ' என மாற்றிக் கொள்க.
30 |
மீயே வியதோர்
விதிமேல் விதியொன் றுண்டோ விறைவா
நீயே வியதே நான்மே வியநீ தியெனத் தொழுதே
போயே வியதைப் புகழ்மே னின்றாட் குரைசெய் தனனால்
வாயே வியபா நிகரா மறைக்கோர் கொழுகொம் பன்னான். |
|
"மீ ஏவியது ஓர்
விதிமேல் விதி ஒன்று உண்டோ? இறைவா,
நீ ஏவியதே நான் மேவிய நீதி" எனத் தொழுதே
போய், ஏவியதைப் புகழ் மேல் நின்றாட்கு உரை செய்தனன். ஆல்,
வாய் ஏவிய பா நிகரா மறைக்கு ஓர் கொழுகொம்பு அன்னான் |
புலவர்
தம் வாய் பிறப்பித்த செய்யுளும் ஒப்பாகாத வேதத்திற்கு
ஒப்பற்ற கொழுகொம்பு போன்றவனாகிய சூசை, "மேலுலகினின்று ஏவப்பட்ட
ஒரு கட்டளைக்கு மேலாக வேறொரு கட்டளை உண்டோ? இறைவா, நீ
ஏவியதே நான் விரும்பத்தக்க நீதி ஆகும்" என்று கடவுளைத் தொழுது
பாய், அவ்வாறு கடவுள் ஏவிய செய்தியைப் புகழுக்கெல்லாம் மேலாக
யர்ந்து நின்ற மரியாளுக்கு எடுத்துரைத்தான்.
'ஆல்'
அசைநிலை. |