31 |
இப்பா
லேதொன் றில்லா தெல்லா முளவாக் கினனாய்
முப்பா லொன்றா முந்தைக் குரிமாண் முறையோ டருகுற்
றொப்பா லடையா விப்பண் புடையோ ருடையிவ் வெளிமைக்
கப்பார் கலிசூ ழுலகா ளரசர் தகவொத் துளதோ. |
|
இப்பால் ஏது
ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய்
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி மாண் முறையோடு அருகு
உற்று
ஒப்பால் அடையா இப் பண்பு உடையோர் உடை இவ் எளிமைக்கு
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ? |
இம்மண்ணுலகில்
துணைக்காரணம் ஒன்றும் இல்லாமலே
எல்லாவற்றையும் படைத்தவனாய், மூவுலகங்களுக்கும் தான் ஒருவனே
தலைவனுமாய், எல்லாவற்றிற்கும் மூலகாரணனுமாகிய கடவுளுக்கு உரிய
மாண்பு முறைக்கு ஏற்ற வண்ணமாய் அவன் அருகே அடைந்துநின்று,
ஒப்புமை கூறத்தக்க வகையில் வேறு எவரும் அடைய இயலாத இந்தப்
பண்புடையாளர் இருவரும் கொண்டுள்ள இந்தத் தாழ்மைப் பண்பிற்கு,
நீராலாகிய கடல் சூழ்ந்த இவ்வுலகத்தை ஆளும் அரசரது பெருமையும்
ஒப்பாகுமோ?
பின்
'முந்தை' என மூல காரணம் சுட்டப் படவே, முன் 'ஏது'
என்றது துணைக் காரணம் என்பது பெறப்பட்டது.
ஈகைச்
சிறப்பு
-
மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.
32 |
நீர்க்க
ணங்குழி நேடிய நீர்மையாற்
சீர்க்க ணங்கெளி மைத்துணை தேடினர்
கார்க்க ணங்குறை கான்றலும் போலறத
தேர்க்க ணங்கெனு மிகையி யற்றினார். |
|
நீர்க் கணம்
குழி நேடிய நீர்மையால்
சீர்க்கு அணங்கு எளிமைத் துணை தேடினர்;
கார்க்கு அணங்கு உறை கான்றலும் போல், அறத்து
ஏர்க்கு அணங்கு எனும் ஈகை இயற்றினார். |
|