நீர்
வகைகளெல்லாம் பள்ளத்தைத் தேடிச்செல்லும் தன்மைபோல்,
சூசையும் மரியாளும் சிறப்பிற்கெல்லாம் அழகு தருவதென்று தாழ்மையைத்
துணையாகத் தேடினர்; கருமேகத்திற்கு அழகு அந்நிறமும் அல்லாமல்
மழையைப் பொழிதலுமாய் அமைவதுபோல், அறத்தின் அழகுக்கு
அழகு என்னும் தன்மையாய் ஈகையைக் கடைப்பிடித்தனர்.
பள்ளத்தைத்
தேடிச்செல்லும் நீர்போல் தாழ்மை என்னும்
தலையாய புண்ணியம் உள்ளவிடத்துப் பிற புண்ணியமெல்லாம் சென்று
சேர்ந்து சிறப்புச் செய்யும் என்பதும், அறங்களிலெல்லாம் ஈகையறமே
சிறந்தது என்பதும் கருத்தாகக் கொள்க. தாழ்மையால் தனக்கு நலமும்
ஈகையால் பிறர்க்கு நலமும் சிறப்பு வகையால் மேலோங்குதலும் உணர்க.
கான்றல்
- காலுதல்: பகுதி - கால், இங்குக் 'கான்று' என்பதே
பகுதி போற் கொண்டு தொழிற்பெயர் அமைக்கப்பட்டுள்ளது. பிற
சொற்களுடன் ஒப்பிடுக: என் - பகுதி, என்னல்; என்றல் - அல், தல்.
போல் - போலல், போலுதல் - போறல், ஈன் - ஈனல், ஈன்றல்.
கீன் - கீனல், கீன்றல். கோல் - கோலல், கோலுதல். சால் - சாலல்,
சாலுதல்.
33 |
மறுமை
நாடிவ ழங்கிய வன்பொடு
நறுமை நாடிய வான்கொடை தல்கலிற்
சிறுமை நாடிய பற்றறத் தீர்த்திட
வெறுமை நாடினர் நாடரு மேன்மையார். |
|
மறுமை நாடி வழங்கிய
அன்பொடு
நறுமை நாடிய வான் கொடை நல்கலின்
சிறுமை நாடிய பற்று அறத் தீர்த்திட
வெறுமை நாடினர் நாடு அரு மேன்மையார். |
பிறர்
நாடியும் அடைவதற்கரிய மேன்மை கொண்டுள்ள
அவ்விருவரும் மறுமைப் பயனையே விரும்பி, நிலைபெற்ற அன்போடு,
தன்மையைச் சார்ந்த சிறந்த கொடையை அளிக்கக் கருதியமையால்,
தீமையைச் சார்ந்த இரு வகைப் பற்றும் அறவே விலக்குமாறு, தமக்கென்று
வறுமையையே விரும்பினார்.
"ஈதல் இசைபட
வாழ்தல்; அதுவல்லது, ஊதியம் இல்லை உயிர்க்கு"
என்ற குறளின்படி (231), புகழ் கொடைக்கு இம்மைப் பயனாகக்
கூறப்படுதலின் அதனையும் கருதாது, மறுமைப் பயன் ஒன்றே கருதி |