பக்கம் எண் :

முதற் காண்டம்484

அவ்விருவரும் கொடையில் ஈடுபட்டனர். பற்று - நான், எனது
என்னும் இருவகைப் பற்று, நான் என்னும் அகந்தையும் எனது என்னும்
ஆணவமும் இருந்த விடத்துக் கொடைப் பயனும் கொடைக் குணமும்
முறையே கெடுமாதலின், அவற்றிற்கு இடமில்லாத வறுமையைத் தாம்
நாடினர் என்பது கருத்து.

 
                34
வீட்டு நன்மைவி ளைநில மாமிலோர்
நீட்டு தங்கர மென்றுநி னைத்தருள்
மாட்டு வித்தென வந்திரப் பார்கரத்
தீட்டு வான்பொரு ளெண்ணில தாமரோ.
 
வீட்டு நன்மை விளை நிலம் ஆம், இலோர்
நீட்டு தம் கரம், என்று நினைத்து, அருள்
மாட்டு வித்து என, வந்து இரப்பார் கரத்து
ஈட்டு வான் பொருள் எண் இலது ஆம் அரோ.

     பொருள் கேட்டு நீட்டி நிற்கும் வறியவர்தம் கைகளே வீட்டுலகம்
அடைவதற்கு வேண்டிய புண்ணியப் பயிர் விளையும் நிலமென்று நினைத்து,
தம்மிடம் வந்து இரப்பவர் கைகளில் கொடுக்கும் கொடையையே வித்தாகக்
கொண்டு, அதன் மூலம் இவர்கள் ஈட்டிய வானுலக நன்மை எண்ணுக்கு
அடங்காதது ஆகும்:

     'அரோ' அசை நிலை. 'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ
விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்' என்ற குறள் (85) கருத்து
இங்கு நினைவுறத் தக்கது.

 
               35
ஈய்ந்து தாமுமில் லாரென வாயபின்
காய்ந்து தீய்ந்தரு ளங்கடி தோண்டெனாத்
தோய்ந்து லாமரு ளாற்றொழில் செய்துயிர்
வாய்ந்து வாழவு மீகைவ ழங்குவார்.
 
ஈய்ந்து தாமும் இல்லார் என ஆய பின்,
காய்ந்து தீய்ந்த குளம் கடி தோண்டு எனா,
தோய்ந்து உலாம் அருளால் தொழில்
                     செய்து உயிர்
வாய்ந்து வாழவும் ஈகை வழங்குவார்.