உள்ளதெல்லாம்
இரவலர்க்குக் கொடுத்துத் தாமும் வறியவரென்று
அமைந்த பின்பு, வெயிலால் காய்ந்து கருகிய குளத்தை விரைந்து
தோண்டுதல் போல், தம் உள்ளத்தில் தோய்ந்து உலாவும் கருணையினால்
உந்தப் பெற்றுத் தொழில் செய்து பொருள் தேடியும், பிற உயிர்கள்
வேண்டுவன பெற்று வாழுமாறு அவ்விருவரும் கொடை வழங்குவர்.
'வாழவும்'
என்ற விடத்து நின்ற உம்மையைப் பிரித்து, 'தொழில்
செய்து' என்பதனோடு கூட்டுக. 'ஈந்து' என்ற சொல் எதுகை இன்னோசைப்
பொருட்டு 'ஈய்ந்து' என நின்றது. 'ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்
அந்நாளும் அவ் ஆறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்' என்ற நல்வழிக்
கருத்து (9) இங்கு ஒலிக்கின்றது.
| 36
|
உழுதுண் பாருயிர் வாழ்பவர் மற்றெலாந்
தொழுதுண் பாரெனிற் றாந்தொழில் செய்தபின்
வழுதுண் பார்க்கொடை கோடலில் லாயின
பொழுதுண் பாரிலி யாரெனப் பூசவே. |
| |
'உழுது உண்பார்
உயிர் வாழ்பவர்; மற்று எலாம்
தொழுது உண்பார்' எனில், தாம் தொழில் செய்த பின்,
அழுது உண்பார், கொடை கோடல் இல் ஆயின
பொழுது, உண்பாரில் யார் எனப் பூசவே? |
'தாமே
உழுது விளைவித்து உண்பவரே உயிர் வாழ்பவர் என்னத்
தக்கவர்; மற்றெல்லோரும் அவ்வுழவரைத் தொழுது பெற்று உண்பவராவார்'
என்ற பகுப்பு முறையில் நோக்கினால், தாமே தொழில் செய்து முயன்று
தேடியபின், தாம் கொடுக்கும் கொடையைக் கொள்வார் இல்லையென்று
அமைந்தபொழுது அழுது கொண்டடே உண்பவராகிய இவ்விருவரையும்,
உண்பார் என்ற பகுப்பில் எவ்வகையார் என்று புனைந்துரைப்பதாம்?
"உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம், தொழுதுண்டு
பின்செல் பவர்" என்ற குறள் (1033) மேலும் விரிந்து பொருள் சிறக்க
முனிவர் கையாளும் சொற் சிலம்பம் நினைந்து இன்புறத் தக்கது.
உண்பாரில்
+ யார் - உண்பாரிலியார்; மெய்முன் வந்த யகரம்
இடையே இகரம் பெற்றது.
|